வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அபாரம்!

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, முதலில் அங்கு நடந்த டி20 தொடரில் 0-3 என இழந்தது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில், முதலில் பேட்டிங் செய்தஆஃப்கானிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து அதிர்ச்சியளிக்கும் விதமாக விளையாடிய வெ.இ., 44.4வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களுக்கு சுருண்டது.

ஆஃப்கன் வீரர் ரஷீத் கான் 8.4 ஓவர்கள் வீசி, 18 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் அணிக்காக ஆடி அசத்தியவர் ரஷீத் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close