Advertisment

3-வது டெஸ்ட்: இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள்?

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 7-ந் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தல் தொடங்கவுள்ளது.

author-image
WebDesk
New Update
3-வது டெஸ்ட்: இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள்?

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி 3 டி20 மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவும், அதன்பிறகு நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவும் கைப்பற்றியது.

Advertisment

தொடர்ந்து டிசம்பர் 17-ந் தேதி அடிலெய்டில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி பகல் – இரவு போட்டியாக நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதிலும் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 53 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தி அணி வெறும் 36 ரன்களில் சுருண்டது பெரும் விமர்சனங்களை பெற்றது. இதனைத் தோடர்ந்து மெல்போர்னில் கடந்த 26-ந் தேதி நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலாவை தோற்கடித்து பதிலடி கொடுத்தது.

தற்போதைய நிலையில் இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ள நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 7-ந் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. இரு இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்ற பெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும் என்பதால் இரு அணிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரை முடிந்த இந்திய அணி அமீரகத்தில் இருந்தபடியே ஆஸ்திரேலியா சென்றது. அங்கு 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட இந்திய அணி அதன்பிறகு தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடிய கேப்டன் விராட்கோலி அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால், முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பினார். அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பேற்ற ரஹானே தனது அருமையான கேப்டன்சி மூலம் 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றியை தேடி தந்தார்.

தொடர்ந்து சொதப்பும் பேட்டிங் :

இதுவரை நடைபெற்றுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சார்பில் 1 சதம் 2 அரைசதம் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில், கேப்டன் விராட்கோலி மட்டுமே அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து 2-வது போட்டியில் ரஹானே (112) சதமும், ஆல்ரவுண்டர் ஜடேஜா (57) ரன்கள் மட்டுமே எடுத்தனர். இவர்களை தவிர்த்து 2வது போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மான் கில் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி விளையாடினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் மயங்க் அகர்வால், ஆல்ரவுண்டர் ஹனுமா விஹாரி, 3-வது இடத்தில் களமிறங்கும் புஜாரா ஆகியோர் பேட்டிங் இரு போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதனால் 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இவர்களில் எவரேனும் கழற்றிவிடப்படலாம். அதில் புஜாரா தடுப்பாட்டத்தில் திறன்படைத்தவர் என்பதால் அவரது இடம் காலியாக வாய்பில்லை. மேலும் கடந்த 2 போட்டிகளில் விளையாடாத மற்றொரு தொடக்க வீரர் ரோகித் சர்மா 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆனால் அவர் எந்த இடத்தில் விளையாடுவார் என்பது குறித்து சந்தேகம் நிலவி வருகிறது. எப்படி இருந்தாலும் 3-வது போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பெரும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பந்துவீச்சாளர்களை துரத்தும் காயம்:

பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணியின் முன்னணி சுழ்பந்துவீச்சாளர் அஸ்வின் 2 போட்டிகளில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பும்ரா 8 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். ஆனால் இந்த தொடர் தொடங்குதற்கு முன்பே காயம் காரணமாக இஷாந்த் சர்மா விலகினார். தொடர்ந்து முதல் போட்டியில் விளையாடிய முகமது ஷமியும் 2-வது போட்டியில் சிறப்பாக விளையாடிய உமேஷ் யாதவ் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர்.

இதில் உமேஷ் யாதவிற்கு பதிலாக டி20 தொடரில் அசத்திய நடராஜன் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியில் நடராஜன் சேர்க்கப்படுவது உறுதியாகியுள்ளது. ஆனால் அவர் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடுவதும் சந்தேகம்தான் என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் தெரிவித்துள்ளார். வார்னரின் இந்த கணிப்பை நடராஜன் பொய்யாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி :

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் பந்துவீச்சாளர்களை தவிர பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பலாகவே விளையாடியுள்ளனர். இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் போட்டியில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணியை 36 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பலமாகும். ஸ்டார்க் (8) ஹாசில்வுட் (7), கம்மின்ஸ் (10) ஆகியோர் பந்துவீச்சில் பலம் சேர்த்தாலும் பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றம் காணவேண்டும்.

இதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் பெயின் (74), மற்றும் ஜோ பர்னர் (51) மட்டுமே அரைசதம் கடந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிலும் 2-வதுடெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவர் கூட அரைசதம் அடிக்காத நிலையில், இரு இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்குள் சுருண்டது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் இரு டெஸ்ட் போட்டிகளிலும் சொற்ப ரன்களில் வெளியேறியது ஆஸ்திரேலிய அணிக்கு பாதகமாக அமைந்தது.

மேலும் தொடக்க வீரர் வார்னர் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக உள்ளது. முதல் 2-வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத அவர், கடைசி 2- டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றிருந்தாலும், அவர் முழு உடல் தகுதி எட்டாததால் ஆடும் லெவன் அணியில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்ல சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

கொரோனா அச்சுறுத்தல் :

இந்திய அணியில் ரோகித் சர்மா சுப்மான் கில், பிரித்விஷா, நவதீப் சைனி, பண்ட் ஆகியோர் கொரோனா விதிகளை மீறி ஹோட்டலுக்கு சென்றதால் பெரும் அவர்கள் 5 பேரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியுடன் அவர்கள் 5- பேரும் சிட்னி சென்றுள்ளதால், 3-வது டெஸ்ட் போட்டிக்கு எவ்வித இடையூறும் இருக்காது என தெரிகிறது.

சிட்னி மைதானம் எப்படி?

சிட்னி மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளிலும், 5 போட்டிகள் டிராவிலும் முடிவடைந்துள்ளது. கடந்த 1978-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணி சார்பில் சச்சின் டெண்டுல்கர் 5 போட்டிகளில் விளையாடி 785 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 241ரன்கள் எடுத்துள்ளார்.

அவருக்கு அடுத்தப்படியாக விவிஎஸ் லக்ஷ்மன் 4 டெஸ்ட் போட்டிகளில் 549 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 178 ரன்கள் குவித்துள்ளார். இந்த மைதானத்தில் இந்திய அணி சார்பில அனில்கும்ளே 141 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியதே இந்திய இந்திய அணியில் ஒரு வீரரின் அதிகபட்ச விக்கெட்டாகும். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரிஷப்பண்ட்- ஜடேஜா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்தது. இதற்கு முன் அமர்நாத் கவாஸ்கர் இருவரும் 1978-ம் ஆண்டு 3-வது விக்கெட்டுக்கு 224 ரன்கள் சேர்த்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment