Advertisment

தமிழக அணிக்கு 4-வது வெற்றி: ஜெகதீசன், தினேஷ் கார்த்திக் அபாரம்

அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 51 பந்துகளில் 4 பவுண்டரிகள்,  5 சிக்ஸர்களை பறக்க விட்டு 78 ரன்களைச் சேர்த்தார்

author-image
WebDesk
New Update
4th win for tamilnadu cricket team Dinesh Karthik jagathisan -தமிழக அணிக்கு 4-வது வெற்றி: ஜெகதீசன், தினேஷ் கார்த்திக் அபாரம்

செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி 10ம் தேதி  முதல்  கொல்கத்தாவில் நடைபெற்று வருகின்றது.  ஜாதவ்பூர் பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் தமிழக  அணியும், ஹைதராபாத் அணி அணியும் மோதின.

Advertisment

இதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. அந்த  அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரக்னே ரெட்டி (23 பந்துகள்  30 ரன்கள்), சிறப்பான துவக்கத்தை கொடுத்திருந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேற, நிதானமாக  விளையாடிய பாவனக சந்தீப் 36 பந்துகளில்   2 சிக்ஸர்களையும் 2 பவுண்டரிகளையும் அடித்து  41 ரன்களை சேர்த்தார். இதுவே அந்த அணி 152 ரன்களை சேர்க்க உதவியாக இருந்தது.

பின்னர் களமிறங்கிய தமிழக அணி 19.3 ஓவர்களில்  3 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள்  எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 51 பந்துகளில் 4 பவுண்டரிகள்,  5 சிக்ஸர்களை பறக்க விட்டு 78 ரன்களைச் சேர்த்தார். அதோடு ஜெகதீசன் இந்த தொடரில்  தனது 3வது அரை சதத்தையும் பதிவு செய்தார்.

11.1 ஓவருக்கு பின் ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் (30பந்துகள்  40ரன்கள்)  மிகவும் சிறப்பாகவே  விளையாடினார். இந்த ஜோடி இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்து,  20 ஓவர்கள் முடிய 3 பந்துகள் இருக்கும் போதே நிர்ணயித்த இலக்கை அடைந்தது. இது இந்த தொடரில் தமிழக அணி தொடர்ச்சியாக பெரும் 4 வது வெற்றி ஆகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Dinesh Karthik Mustaq Ali Trophy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment