Advertisment

பாகிஸ்தானில் 'பீட்சா' போடும் விராட் 'போலி'

கோலி, பாகிஸ்தானில் ஒரு பீட்சா கடையில், பீட்சா தயாரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்?

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாகிஸ்தானில் 'பீட்சா' போடும் விராட் 'போலி'

இன்றைய கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வீரர்களின் பட்டியலில் இருக்கும் மிகக் குறைந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். சச்சின், டி வில்லியர்ஸை போல் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பெண் ரசிகைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களது 'ட்ரீம் ஹீரோ' இப்போதைக்கு விராட் தான். எப்படி கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் குவித்து கலக்குவாரோ, அதே போன்று லுக்கிலும் எப்போதும் விராட் டாப் தான். தாடி வைப்பதானாலும் சரி, தலையின் இரண்டு பக்கங்களில் கோடு விடுவதாக இருந்தாலும் சரி, பசங்களுக்கு புதிது புதிதாய் ஹேர் ஸ்டைலை அறிமுகம் செய்வது கோலி தான்.

Advertisment

இவ்வளவு சிறப்புகள் கொண்ட கோலி, பாகிஸ்தானில் ஒரு பீட்சா கடையில், பீட்சா தயாரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்? அப்படித் தான் வைரல் ஆகியிருக்கிறார் இந்த பாகிஸ்தான் விராட் 'போலி'. மனுஷர் தூரத்தில் இருந்து பார்க்க விராட் போலவே இருக்க, ஜெர்க் ஆகியிருக்கின்றனர் அங்கு சாப்பிட வந்தவர்கள்.

'பாகுபலி 2' டிரைலர் இறுதியில் வரும் பிரபாஸ் - ராணா க்ளோஸ்அப் ஃபேஸ் ஷாட் போல், அருகில் சென்று பார்த்தபோது தான் தெரிந்திருக்கிறது, அவர் கோலி அல்ல... அங்கு வேலைப் பார்க்கும் கோலியைப் போல் முக அமைப்பு கொண்ட வேறொரு நபர் என்று. (நல்லா கிளப்புறாய்ங்கயா பீதிய....!). இப்படி பீதியடைஞ்சா ஒருவர், அந்த நபர் பிட்சா போடுவதை தன் போனில் பதிவு செய்ய, இப்போ பீக் வைரல் ஆகியுள்ளார் இந்த விராட் போலி.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment