Advertisment

தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் மரணம்; தலைவர்கள், ரசிகர்கள் இரங்கல்

தனது அழகிய தமிழ் உச்சரிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த அப்துல் ஜப்பார் கிரிக்கெட் வர்ணனையாளர் மட்டுமல்ல. ஒரு எழுத்தாளரும் ஆவார். அவருடைய மறைவுக்கு தலைவர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
abdul jabbar passes away, tamil cricket commentator abdul jabbar, தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் மரணம், அப்துல் ஜப்பார் மரணம், அப்துல் ஜப்பார், தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர், cricket commentator abdul jabbar passes way, abdul jabbar dies, prabhakaran, mgr, kamal haasan

பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஜப்பார். தொலைக்காட்சிகள் இல்லாத காலத்தில் வானொலியிலும் தொலைக்காட்சிகள் வந்த பிறகு தொலைக்காட்சிகளிலும் கிரிக்கெட் போட்டிகளை தனது அழகான சுவாரஸியமான தமிழ் வர்ணனை மூலம் போட்டி நடப்பதை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியவர் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார். இவருடைய வர்ணனைக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.

அப்துல் ஜப்பார், தமிழ்நாடு - கேரளா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை செய்து தனது வர்ணனையாளர் பயணத்தை தொடங்கினார். பின்னர், 1980-களில் பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு வானொலியில் வர்ணனை செய்தார். அதனைத் தொட்ர்ந்து, தொலைக்காட்சிகள் வந்த பிறகும், ஈஎஸ்பின், நியோ ஸ்போர்ட்ஸ் போன்ற விளையாட்டுத் தொலைக்காட்சிகளிலும் அவருடைய அழகிய தமிழில் வர்ணனை செய்துள்ளார்.

அப்துல் ஜப்பார் கிரிக்கெட் வர்ணனையாளர் மட்டுமல்ல. ஒரு எழுத்தாளரும் ஆவார். காற்று வெளியினிலே, இறைத்தூதர் முஹம்மது என்ற மொழிபெயர்ப்பு நூல் மற்றும் அழைத்தார் பிரபாகரன் என்று மூன்று நூல்களை எழுதியுள்ளார். அழைத்தார் பிரபாகரன் என்கிற நூலில் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த அனுபவங்களை எழுதியுள்ளார்.

மேலும், அவர் லண்டன் தமிழ் வானொலி விருது, இலங்கை அரசின் விருது, துபாயில் 10 அமைப்புகள் சேர்ந்து அளித்த விருது, தமிழ்மாமணி விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள்,  ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரித்துள்ளார்.

Cricket Prabhakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment