Advertisment

இப்படியாய்யா பரிசு கொடுப்பீங்க… அபூர்வ சாதனை படைத்த வீரரை அணியில் இருந்து நீக்கிய நியூஸி.!

10-wicket hero Ajaz Patel misses out on New Zealand Test squad Tamil News: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய உலக சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல், அந்நாட்டு டெஸ்ட் அணியில் இருந்து திடீர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Ajaz Patel tamil news: Ajaz misses out on New Zealand Test squad

Ajaz Patel tamil news: உலகக்கோப்பை டி-20 தொடருக்கு பிறகு இந்திய மண்ணில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம் அஜாஸ் பட்டேல் ஜிம் லேக்கர், கும்ப்ளேவிற்கு பிறகு ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்கிற உலக சாதனையை படைத்தார்.

Advertisment
publive-image

வாழ்த்து மழை

publive-image

மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு நிகழ்த்தப்பட்ட இந்த சாதனைக்காக அஜாஸ் பட்டேலுக்கு உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்தனர். இந்திய வீரர் அஸ்வின், இந்திய அணி வீரர்கள் கையெப்பமிட்ட தனது ஜெர்சியை அஜாஸ் பட்டேலுக்கு நினைவு பரிசாக வழங்கினார். அஜாஸ் பட்டேல் இந்திய வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவை இணைய பக்கங்களில் வைரலாகின.

publive-image
publive-image

திடீர் நீக்கம்

இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் இருந்து அஜாஸ் பட்டேல் திடீர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்து மண்ணில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான 13 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.

publive-image

இந்த பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர் மற்றும் மேட் ஹென்றி, மிடில்-ஆடர் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் மற்றும் ஒரே ஒரு சுழல் விருப்பமாக ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பெயர் இடம்பெற்று இருந்தது. ஆனால், அஜாஸ் பட்டேலின் பெயர் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், நியூசிலாந்து அணியும் நிறவெறியுடன் அஜாஸ் பட்டேலை நீக்கிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.



பயிற்சியாளர் விளக்கம்

ஆனால், இது குறித்து விளக்கம் அளித்துள்ள நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டேத், சூழலுக்கு தகுந்த வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பேசியுள்ள அவர், "உலக சாதனை படைத்தும் அவருக்கு அணியில் இடம் கிடைக்காதது வருந்தம் அளிக்கிறது. வங்கதேச அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் விதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் மிகவும் பொருத்தமானவர்கள் என்று நம்புகிறோம்.

ராச்சின் மற்றும் டேரில் இருவரும் அணியில் இருப்பது எங்களுக்கு ஒரு நல்ல சமநிலையையும், நாங்கள் எதிர்பார்க்கும் நிலைமைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒரு முடிவை தேர்ந்தெடுக்கும் திறனையும் தருவதாக உணர்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக வங்கதேச தொடரில் இடம்பெறவில்லை. இதனால் அணியின் கேப்டனாக டாம் லத்தாம் செயல்பட உள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமால் இருந்த பௌல்ட் அணிக்கு திரும்புகிறார்.

"இந்தத் தொடரில் கேன் விளையாடததது ஏமாற்றமளிக்கிறது. ஆனால், இந்தியாவில் நாம் குறிப்பிட்டது போல, தனது திறனை அவர் மேம்படுத்திக்கொள்ளவும், வலுப்படுத்திக்கொள்ளவும் அவருக்கு தொடர்ந்து தொடர்ச்சியான ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

டாம் அணியை வழிநடத்துவதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. கடந்த காலத்தில் அவர் கேப்டனாக செயல்பட்டபோது அணியை திறம்பட வழிநடத்தி இருந்தார்." என்று பயிற்சியாளர் கேரி ஸ்டேத் தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான நியூசிலாந்து டெஸ்ட் அணி விபரம் பின்வருமாறு:

டாம் லாதம் (கேப்டன்), டாம் ப்ளன்டெல், டிரென்ட் போல்ட், டெவோன் கான்வே, மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வில் யங்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Vs New Zealand Sports Cricket New Zealand Bangladesh Ajaz Patel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment