Advertisment

அலைஸ்டார் குக் பிடித்த 'நம்பமுடியாத' கேட்ச்; ஒரு உயிர் தப்பியது!

ஒருவேளை அவரது முகத்தை பந்து தங்கியிருந்தால்.....

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
அலைஸ்டார் குக் பிடித்த 'நம்பமுடியாத' கேட்ச்; ஒரு உயிர் தப்பியது!

இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலைஸ்டார் குக்கினை, கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திட மாட்டார்கள். 2012 - 2013 ஆண்டில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட குக் தலைமையிலான இங்கிலாந்து அணி, தோனி தலைமையிலான இந்திய அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. 4 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில், 2-1 எனும் கணக்கில் இங்கிலாந்து வென்று சரித்திரம் படைத்தது.

Advertisment

குக் தலைமையில், இங்கிலாந்து படைத்த மிகப்பெரும் சாதனை என்றே இதனைக் கூறலாம். பேட்டிங் செய்யும் போது சிறந்த பேட்ஸ்மேனாகவும், ஸ்லிப்பில் சிறந்த ஃபீல்டராகவும் அவர் தன்னை எப்போதும் நிரூபித்து இருக்கிறார். இருப்பினும், சில தொடர் தோல்விகளால் அவர் தனது டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது அவர் உள்ளூர் கிளப் அணியான எஸ்ஸெக்ஸ் அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில், போட்டியின் இடைவெளியின் போது, குக்கினை நிரூபர் ஒருவர் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தார். இருவரும் மிக ரிலாக்சாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது, குக் பின்புறமாக சிறிது தூரத்தில் வீரர் ஒருவர் பேட்டிங் பயிற்சி செய்துக் கொண்டிருந்தார். அவர் அடித்த பந்து, மின்னல் வேகத்தில் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தவரின் தலையை நோக்கி வந்தது. அதனை கண் இமைக்கும் நேரத்தில் குக் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டார். குறிப்பாக, எதிரே கேள்விக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நபரின் உயிரை காப்பாற்றிவிட்டார். தலையை நோக்கி வந்த பந்து, டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் கனமான பந்து ஆகும். ஒருவேளை அவரது முகத்தை பந்து தங்கியிருந்தால், தலை டாப் ஓப்பனே ஆகியிருக்கும்.

தற்போது இந்த வீடியோ செம வைரலாக பரவி வருகிறது, பாராட்டுக்களுடன்...!

https://www.facebook.com/EssexCricket/videos/10155680409964050/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment