Advertisment

டான் பிராட்மேன் வீட்டுக் கதவை தட்டிய ஸ்டீவ் ஸ்மித்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டான் பிராட்மேன் வீட்டுக் கதவை தட்டிய ஸ்டீவ் ஸ்மித்!

மெல்பேர்னில் நடைபெற்ற பாக்சிங் டே ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், சதம் அடித்ததன் மூலம் டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்.

Advertisment

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேன், அடிலெய்டு, பெர்த்தில் நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகித்தது.

இந்நிலையில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் கடந்த 26ம் தேதி தொடங்கியது. இன்றுடன் (டிச.,30) முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், 2-வது இன்னிங்சில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 275 பந்தில் 6 பவுண்டரியுடன் 102 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்திருந்த போது, போட்டியை முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் சம்மதித்ததால் போட்டி டிராவில் முடிந்தது.

இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நான்கு சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை டான் பிராட்மேன் உடன் பகிர்ந்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

இதற்கு முன் டான் பிராட்மேன் 1928 முதல் 1931 வரை 112, 123, 152 மற்றும் 167 ரன்கள் அடித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 192, 134*, 165* மற்றும் 102* ரன்கள் அடித்து டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார்.

மேலும் இன்றைய சதம் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 23 சதங்களை ஸ்மித் நிறைவு செய்துள்ளார். அத்துடன் விரைவாக 23 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்தியாவின் கவாஸ்கருடன் இணைந்து 2-வது இடத்தை பிடித்துள்ளார். டான் பிராட்மேன் 59 இன்னிங்சில் 23 சதங்களும், சுனில் கவாஸ்கர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 102 இன்னிங்சில் 23 சதமும், மொகமது யூசுப் 122 இன்னிங்சில் 23 சதங்களும், சச்சின் தெண்டுல்கர் 123 இன்னிங்சில் 23 சதங்களும் விளாசியுள்ளனர்.

கேப்டனாக டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 15 சதங்களுடன் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக் உடன் இணைந்துள்ளார். தென்ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 25 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 19 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் 2-வது இடத்தில் உள்ளார்.

முன்னதாக, நம்ம ரவிச்சந்திரன் அஷ்வின்,  "ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் போது, எதிரணிகள் அவர்களுடன் உட்கார்ந்து, ஸ்மித் இவ்வளவு ரன்கள் தான் அடிக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டுக் கொண்டால், அனைவருக்கும் நல்லது" என கூறியது போல் உண்மையில் அணிகள் உடன்படிக்கை தான் போட்டுக் கொள்ள வேண்டும் போல...! என்னம்மா அடிக்கிறான் மனுஷன்!.

December 2017

December 2017

Steve Smith Don Bradman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment