Advertisment

சச்சினை பின்னுக்குத் தள்ளி ஸ்டீவ் ஸ்மித் சாதனை! வியந்து பாராட்டிய ரோஹித் ஷர்மா!

இந்த இன்னிங்ஸின் போது, ஸ்மித்திடம் இருந்து உலகின் தலை சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கான நுணுக்கங்களை காண முடிந்தது. பல முன்னணி வீரர்களும் பாராட்டு.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
சச்சினை பின்னுக்குத் தள்ளி ஸ்டீவ் ஸ்மித் சாதனை! வியந்து பாராட்டிய ரோஹித் ஷர்மா!

பெர்த்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று(சனி), ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், தனது 22-வது டெஸ்ட் சதத்தை விளாசினார். இதில் 19 பவுண்டரிகளும், 1 மெகா சிக்சரும் அடங்கும். இந்த இன்னிங்ஸின் போது, ஸ்மித்திடம் இருந்து உலகின் தலை சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கான நுணுக்கங்களை காண முடிந்தது. 138 பந்துகளில் அவர் இந்த சதத்தை அடித்தார். ஸ்மித்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் அதிவேகமான சதமாகும்.

Advertisment

இந்தச் சாதனையின் மூலம், டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அதிவேகமாக 22 சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திலிருந்த 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி, ஸ்மித் அந்த இடத்தை பிடித்துள்ளார். 114 இன்னிங்ஸில் விளையாடி, சச்சின் 22-வது சதத்தை அடித்தார். ஆனால், ஸ்மித் எடுத்துக் கொண்ட இன்னிங்ஸின் எண்ணிக்கை 108 தான். முதல் இடத்தில் சர் டான் பிராட்மேன் 58 இன்னிங்ஸுடன் முதல் இடத்திலும், சுனில் கவாஸ்கர் 101 இன்னிங்ஸில் 22-வது சதம் அடித்து இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமில்லாமல், இன்று ஸ்மித் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்த ஆண்டில் (2017), டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் 1000 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்தார். அதற்கு பிறகு, ஒரே வருடத்தில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரராக ஸ்மித் உள்ளார். முன்னணி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஸ்மித்தின் இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி வருகின்றனர்.

மேலும், இந்த ஆஷஸ் தொடரில் கேப்டன் ஸ்மித்தின் இரண்டாவது சதம் இதுவாகும். இதன் மூலம் இதுவரை இத்தொடரில் மொத்தம் 4 இன்னிங்ஸில் விளையாடி 326 ரன்கள் குவித்துள்ளார். ஆவரேஜ் 163.

ஸ்மித்தின் ஆட்டத்தை இந்திய அணியின் தொடக்க வீரரும், இலங்கை தொடரில் பொறுப்பு கேப்டனாக பதவி வகிக்கும் ரோஹித் ஷர்மா புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார். அதில், "என்ன ஒரு பேட்ஸ்மேன் இவர். ஆடும் விதத்தைப் பார்த்தால், அவுட்டாகும் வாய்ப்பே இல்லை போல" என்று ரோஹித் ட்வீட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய பின்னர், கேப்டன் ரோஹித் மிகவும் உற்சாக மோடில் உள்ளார்.

Sachin Tendulkar Rohit Sharma Steve Smith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment