Advertisment

இரவு விடுதியில் அடிதடி: பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து அதிரடி நீக்கம்

இரவு விடுதியில் குடித்துவிட்டு அடிதடியில் ஈடுபட்டதாக இங்கிலாந்து அணி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டார்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இரவு விடுதியில் அடிதடி: பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து அதிரடி நீக்கம்

இரவு விடுதியில் குடித்துவிட்டு அடிதடியில் ஈடுபட்டதாக இங்கிலாந்து அணி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டார்.

Advertisment

இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபாரமாக வென்றது. அந்த போட்டி முடிந்ததும் சக வீரர் அலெக்ஸ் ஹேல்சுடன் இரவு விடுதிக்கு சென்ற இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மதுபானம் அருந்தியதுடன் அங்கிருந்த ஒரு நபருடன் வாக்குவாதம் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் ஸ்டோக்ஸ் தாக்கியதில் அந்த நபர் முகத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரிஸ்டல் கவுண்டி போலீசார், ஸ்டோக்சை கைது செய்தனர். இரவு முழுவதும் அவரை சிறையில் வைத்து விசாரித்து, பின்னர் குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் விடுவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (புதன்) நடைபெற உள்ள 4வது ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஸ்டோக்ஸ், ஹேல்ஸ் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இருவரும் இன்று நடைபெறும் போட்டியில் விளையாடமாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஸ்டோக்ஸ் ஏற்கனவே 2012, 2013, 2014ல் இதுபோல் குடித்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் நவம்பர் மாதம் தொடங்க இருக்கும் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் கைது நடவடிக்கையில் சிக்கியிருக்கிறார்.

களத்தில் ஸ்டோக்ஸ் வெளிப்படுத்தும் செயல்பாடுகள் கடவுள் கொடுத்த வரம் எனலாம். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் மிகச் சிறப்பாக செயல்படுபவர் ஸ்டோக்ஸ். அதிலும், டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறும், டி20 போட்டிக்கு ஏற்றவாறும் பொறுமையாகவும், அதிரடியாகவும் விளையாடும் திறம் பெற்றவர் ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ்.

தற்போதைய இங்கிலாந்து அணியில், ரூட், குக் போன்ற வீரர்களுக்கு அடுத்தபடியான சிறந்த டெஸ்ட் வீரராக இருக்கிறார். ஆனால், தொடர்ந்து அவர் தனது நன்னடத்தையில் மோசமாக நடந்து கொள்வது தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.

இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஸ்டோக்ஸ் இல்லையெனில் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி நிச்சயம் தடுமாறும்.

India Vs Australia Ben Stokes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment