Asia Cup 2022 Tamil News: 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரின் கடைசி பதிப்பு ஒரு நாள் போட்டியாக நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை டி20 வடிவத்தில் இடம்பெற உள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளில் களமிறங்கும் லெவன் யார் யார்?
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் கிரிக்கெட்டில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இருதரப்பு கிரிக்கெட் இடைநிறுத்தப்பட்டு 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், உலக மற்றும் ஆசிய கோப்பைகளுக்கான ஆட்டங்களில் மட்டுமே இந்த அணிகள் எதிர்கொள்கின்றனர். அவ்வகையில், இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளன.
இந்திய அணி
ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை கடந்த 8 ஆம் தேதி, அகில இந்திய மூத்த தேர்வுக் குழு அறிவித்தது. அதன்படி அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துகிறார். கே.எல் ராகுல் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் இடம்பிடித்துள்ளனர். அதேவேளையில், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் போன்றோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இருவரும் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) மறுவாழ்வு பெற்று வருகின்றனர்.
இந்திய அணியைப் பொறுத்தவரை, தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்குவார்கள். 3வது இடத்தில் விராட் கோலி களமாட வாய்ப்புள்ளது. மிடில்-வரிசையில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா விளையாடுவார்கள் எனத் தெரிகிறது. சுழலில் மிரட்ட அஸ்வின், யுஸ்வேந்திர சஹல், ரவி பிஷ்னோய் போன்ற வீரர்களும், வேகத்தாக்குதல் தொடுக்க புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய வீரர்களும் உள்ளனர்.
இத்தொடருக்கான இந்திய அணியில் வலது கை வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அதேவேளையில், ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் மற்றும் தீபக் சாஹர் ஆகிய மூன்று வீரர்களும் காத்திருப்புப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணியை கேப்டன் பாபர் ஆசம் வழிநடத்துகிறார். அணியில் முகமது ரிஸ்வான், ஆசிப் அலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர். அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக இந்த தொடரில் விலகியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்படும் ஷாஹீன் அப்ரிடி விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும், ஷாஹீன் அப்ரிடிக்கு பதிலாக 22 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் அணியில் சேர்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியல்:
பாபர் ஆசம் (கேப்டன்), ஷதாப் கான், ஆசிப் அலி, ஃபகார் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதர், மொஹின் காதர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil