Advertisment

Asia Cup Final 2022: பாகிஸ்தானை வீழ்த்தி, ஆசிய கோப்பையை வென்றது இலங்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி; பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

author-image
WebDesk
New Update
Asia Cup Final 2022: பாகிஸ்தானை வீழ்த்தி, ஆசிய கோப்பையை வென்றது இலங்கை

Asia cup final 2022 Sri Lanka vs Pakistan score updates: இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையேயான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது.

Advertisment

இலங்கை இந்த ஆசியக் கோப்பையை நடத்துகிறது, ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடிக்க முடிந்தால், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தனது நாட்டு மக்களுக்கு உணர்ச்சிகரமான பரிசை வழங்கும்.

இலங்கையும் பாகிஸ்தானும் மூன்று முறை ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிகளில் சந்தித்துள்ளன. இலங்கை 1986 மற்றும் 2014 இல் பாகிஸ்தானை தோற்கடித்தது, பாகிஸ்தான் 2000 இல் வெற்றி பெற்றது. இது இலங்கையின் 11 வது ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியாகும். ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் அதிக முறை விளையாடிய அணி இலங்கை ஆகும்.

துபாயில், டாஸ் ஒரு முக்கிய காரணியாக இருக்கும். ஏனெனில், இந்த ஆசியக் கோப்பைப் போட்டியில் இரு அணிகளும் முதலில் பேட்டிங் செய்த போது தோல்வியடைந்தன.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதிப் போட்டி: இரு அணி வீரர்கள் விவரம்

இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, பனுகா ராஜபக்ச, அஷேன் பண்டாரா, தனஞ்சயா டி சில்வா, வனிந்து ஹசரங்கா, ஷமிகா கருணாரத்னா, ஜெப்ரி வான்டர்சே, பிரவீன் மத்ஷனரத், மஹீஷ் தீக்ஷனா, சமிகா மத்ஷனரத், ம. பத்திரனா, நுவனிடு பெர்னாண்டோ மற்றும் தினேஷ் சந்திமால்.

பாகிஸ்தான்: பாபர் ஆசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஆசிப் அலி, ஃபகார் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதர், முகமது ஹஸ்னைன், ஹசன் ஏ ஹலீன்.

இலங்கை அணியில் விளையாடும் 11 வீரர்களின் விவரம்: குசல் மெண்டிஸ், பதும் நிஸ்ஸங்கா, தனஞ்சயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, தசுன் ஷனகா, பனுகா ராஜபக்ச, வனிந்து ஹசரங்கா, ஷமிகா கருணாரத்னா, மஹீஷ் தீக்ஷனா, பிரமோத் மதுஷன், தில்ஷான் மதுஷங்கா

பாகிஸ்தான் அணியில் விளையாடும் 11 வீரர்களின் விவரம்: பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஷதாப் கான், ஆசிப் அலி, முகமது நவாஸ், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன்

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இலங்கை பேட்டிங்

இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். நிஷங்கா ரன் அடிக்க தடுமாற, குசல் மெண்டிஸ் முதல் பந்திலே டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய தனஞ்ஜெயா சிறப்பாக விளையாடினார். இதற்கிடையில் நிஷங்கா 8 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த குணதிலகா 1 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து தனஞ்ஜெயாவுடன் ஜோடி சேர்ந்த ராஜபக்சே அதிரடியாக விளையாடினார். சிறப்பாக ஆடி வந்த தனஞ்ஜெயா 28 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஷனகா 2 ரன்னில் போல்ட் ஆனார். அடுத்து வந்த ஹசரங்கா சிறப்பாக கம்பெனி கொடுக்க அரை சதம் அடித்தார் ராஜபக்சே. அதிரடியாக ஆடிய ஹசரங்கா 21 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கருணரத்னே நிதானமாக விளையாட, ராஜபக்சே அதிரடியாக ஆடி ரன்குவித்தார்.

இதனையடுத்து இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை சேர்த்தது. ராஜபக்சே 71 ரன்களுடனும், கருணரத்னே 14 ரன்களுடனும் கடைசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பாகிஸ்தான் அணி தரப்பில், ஹரிஸ் ரவுஃப் 3 விக்கெட்களையும், நசீம் ஷா, ஷதாப் கான், இப்திகார் அகமது தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் பேட்டிங்

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரிஸ்வான் மற்றும் பாபர் அசம் களம் இறங்கினர். ஒருபுறம் ரிஸ்வான் சிறப்பாக ஆடி வர, மறுமுனையில் ஆடிய பாபர் அசம் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பகார் ஜமாம் முதல் பந்திலே போல்டானார்.

அடுத்து களமிறங்கிய அகமது, ரிஸ்வானுடன் சேர்ந்து அணியின் எண்ணிக்கை உயர்த்தினார். நிதானமாக ஆடிய அகமது 32 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய நவாஸ் 6 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ரிஸ்வான் அரை சதம் அடித்து, பின்னர் 55 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த குஷ்தீல் ஷா இரண்டு ரன்களில் அவுட் ஆக, ஆசிப் அலி டக் அவுட் ஆனார். பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

அடுத்து வந்த ஷதப் கான் 8 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய நசீம் ஷா 4 ரன்களில் அவுட் ஆனார். பாகிஸ்தான் அணி 9 விக்கெட்க்கு 139 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 8 ரன்கள் மட்டுமே சேர்த்து கடைசி பந்தில் ரவுப் அவுட் ஆக பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இலங்கை ஆசிய கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

இலங்கை தரப்பில் மதுசன் 4 விக்கெட்களையும், ஹசரங்கா 3 விக்கெட்களையும், கருணரத்னே 2 விக்கெட்டையும், தீக்‌ஷனா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cricket Pakistan Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment