Asian Games 2018 Live Streaming Day 9: 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி இந்தோனேசியாவில் தொடங்கியது. செப்டம்பர் 2ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், தெற்கு சுமத்ரா தலை நகர் பாலேம்பங்கிலும் இப்போட்டிகள் நடைபெறுகிறது. இந்தத் தொடரில், 15,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், வங்கதேசம், பூட்டான், புரூனே, சீன தைபே, கிழக்கு தைமூர், ஹாங் காங், இந்தோனேஷியா, ஈரான், ஈராக், ஜோர்டான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், மக்காவு, மாலத்தீவுகள், மங்கோலியா, மியான்மார், ஓமன், பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், கத்தார், சிரியா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் பங்கேற்றுள்ளன.
நீச்சல், வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், பேஸ்பால், கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங், குதிரையேற்றம், வாள்வீச்சு, ஹாக்கி, கால்பந்து, கோல்ஃப் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
Asian Games 2018 Live Streaming Day 9 லைவ் அப்டேட்ஸ் இங்கே,
06.00 pm - ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீ தடை தாண்டுதல் ஓட்டத்தில் இந்திய வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர் தமிழ்நாட்டைச் சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
02.20 pm - ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சவுரவ் கோஷலுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
12.30 pm - இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பி.வி.சிந்து ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். அதில், 21-17, 15-21, 21-10 என்ற செட் கணக்கில் சிந்து போராடி வெற்றிப் பெற்றார்.
PV Sindhu creates history by becoming first Indian woman to reach final of an Asian Games event - singles or doubles pic.twitter.com/XV9XeYYY2J
— Express Sports (@IExpressSports) August 27, 2018
12.00 pm - பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதி முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், சீன தைபே வீராங்கனை தாய் டிசுயிங்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் சாய்னா, 17-21, 14-21 என்ற நேர்செட்களில் போராடித் தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஆசிய போட்டியில் சாய்னா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.