கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம்!

சென்னையைச் சேர்ந்த அஸ்வின் மீண்டும் சி.எஸ்.கே அணிக்கே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.

ashwin

வரும் ஐபிஎல் தொடரில் கிங்கிஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் – மே மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் கிங்கிஸ் லெவன் பஞ்சாப் அணியின் சார்பில் விளையாட உள்ளார்.

சி.எஸ்.கே அணியில் விளையாடி வந்தார், அஸ்வின். சூதாட்ட புகாரில் சிக்கி சி.எஸ்.கே அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அதையடுத்து புதிதாக உருவான புனே அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டு முதல் மீண்டும் சி.எஸ்.கே களம் இறங்குகிறது.

சென்னையைச் சேர்ந்த அஸ்வின் மீண்டும் சி.எஸ்.கே அணிக்கே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. இது சென்னை ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இதை அந்த அணியின் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து அஸ்வினுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கிரிக்கெட் வீரல் கே.எல்.ராகுல் ட்விட்டரில் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aswin appointed as captain of kings xi punjab

Next Story
வைரலாகும் ஃபோட்டோ: சச்சினுடன் கண்ணழகி பிரியா வாரியர்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com