இந்தியாவுக்கு எதிரான தொடர்: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் இல்லை!

இந்தியாவிற்கு எதிரான இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களான ஜேம்ஸ் ஃபால்க்னர் மற்றும் கௌல்டர் நிர் ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, ஒரு இருபவது ஓவர் போட்டி ஆகிய தொடரில் விளையாடிவருகிறது. டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து, ஆகஸ்ட் 1-ம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளிடையே 5 ஓருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய தொடர்கள் நடைபெறவுள்ளன. செம்டம்பர் 17-ம் தேதி தொடங்கும் இந்த தொடர் அக்டோபர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தியாவிற்கு எதிரான இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களான ஜேம்ஸ் ஃபால்க்னர் மற்றும் கௌல்டர் நிர் ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

அதன்படி, ஒருநாள்போட்டித் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர்களின் விபரம் பின்வருமாறு:

 • ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்),
 • டேவிட் வார்னர்
 • அஷ்டோன் அகர்
 • கில்டன் கார்ட்ரைட்
 • நாதன் கௌல்டர்- நீல்
 • கம்மின்ஸ்
 • ஜேம்ஸ் ஃபால்க்னர்
 • ஆரோன் ஃபிஞ்ச்
 • ஜோஷ் ஹேசில்வுட்
 • ட்ராவிஸ் ஹெட்
 • கிளென் மேக்ஸ்வெல்
 • மார்கஸ் ஸ்டாய்னிஸ்
 • மேத்யூ வேடு
 • ஆடம் ஸம்பா

டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

 • ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்)
 • டேவிட் வார்னர்
 • ஜேசன் பெக்ரெண்டார்ஃப்
 • டான் கிறிஸ்டியன்
 • நாதன் கௌல்டர்- நீல்
 • கம்மின்ஸ்
 • ஆரோன் ஃபிஞ்ச்
 • டிராவிஸ் ஹெட்
 • மோசிஸ் ஹென்றிக்ஸ்
 • கிளென் மேக்ஸ்வெல்
 • டிம் பெய்ன்
 • கேன் ரிச்சர்ட்சன்
 • ஆடம் ஸம்பா
×Close
×Close