Advertisment

ஷேன் வார்ன் திடீர் மரணம்: கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே திடீரென இன்று மரணமடைந்தார்.

author-image
WebDesk
New Update
ஷேன் வார்ன் திடீர் மரணம்: கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பநது வீச்சாளராக திகழ்ந்த ஷேன் வார்னே (52) இன்று மரணமடைந்தார்.

Advertisment

தான் தங்கியிருந்த வில்லாவில், சுயநினைவிழந்து கிடந்த அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த தகவலை வார்னேவின் வார்னின் நிர்வாகம் ஆஸ்திரேலிய ஊடகமான ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸுக்கு உறுதிப்படுத்தியது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 708  விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வார்னே தான் விளையாடிய காலத்தில் உலகின் தலைசிறந்த லெக் ஸ்பின்னராக திகழ்ந்தார். 293 ஒரு நாள் சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளை சேர்த்து ஆஸ்திரேலியாவுக்காக 300 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடினார்.

வரலாற்றில் மற்ற எந்த பந்துவீச்சாளரையும் விட வார்னே அதிக ஆஷஸ் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment