Advertisment

மால்கம் மார்ஷல் பவுன்ஸ்; இப்போதுள்ள வீரர்கள் சமாளித்திருப்பார்களா? - வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
1983 world cup heroes, balwinder sandhu, indian cricket world cup win, கபில் தேவ், விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் செய்திகள், kapil dev india team, indian cricket history, balwinder sandhu india, west indies, gordon greenidge

1983 world cup heroes, balwinder sandhu, indian cricket world cup win, கபில் தேவ், விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் செய்திகள், kapil dev india team, indian cricket history, balwinder sandhu india, west indies, gordon greenidge

கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீசை 43 ரன்னில் வீழ்த்தி முதல் உலக கோப்பையை இந்தியா வென்றது. 184 ரன் இலக்கை எடுக்க முடியாமல் அந்த அணியை 140 ரணில் இந்திய வீரர்கள் சுருட்டினர்.

Advertisment

ஜூன் மாதம் 25ம் தேதி, இந்திய அணி உலக கோப்பை வென்றது. நேற்றோடு 37-வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இறுதிப்போட்டியில் அதிக ரன் எடுத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த். அவர் 57 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 38 ரன்கள் எடுத்தார்.

காய்கறி வாங்க சென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்: ஊரடங்கை மீறியதாக கார் பறிமுதல்

அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மால்கம் மார்ஷலின் அபாயகரமான பவுன்சர், இந்திய வீரர் பல்விந்தர் சந்துவின் தலையை தாக்கியது. மோசமான அந்த தருணம் குறித்து மனம் திறந்த சந்து,

"யாரோ என்னை கடினமான அறைந்ததைப் போல இருந்தது. என் காதுகள் சூடாகிவிட்டன, என் இடது காதில் இருந்து விசில் சப்தம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அதேசமயம், எனக்கு எந்த வலியும் ஏற்படவில்லை என்பதை நான் காட்ட வேண்டியிருந்தது.

"தார்மீக வெற்றி என்னுடையதாக இருக்க வேண்டும். வலிக்கும் பகுதியை நான் கூட தேய்க்கவில்லை, எதுவும் நடக்கவில்லை என்பது போல் நான் திரும்பி மார்ஷலை எதிர்கொண்டேன், ”என்கிறார் சந்து. சரியாக 37 ஆண்டுகளுக்கு முன்பு, 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி இந்தியா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நாள் அது.

உலக கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தது. இதனால் இந்த இலக்கை எளிதில் "சேஸ்" செய்துவிடுவார்கள் என்று உலகமே நினைக்க, "முழுத் திறமையை வெளிப்படுத்தி போராட வேண்டும். வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுவிடக்கூடாது" என்ற கேப்டன் கபில்தேவின் ஊக்கமான வார்த்தைகளால் இந்தியா புதிய வரலாறு படைக்க முடிந்தது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment