Advertisment

உண்மையில் பன்றிக்கறி, மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதா? விளக்கும் பிசிசிஐ பொருளாளர்!

BCCI Treasurer Arun Dhumal dismisses reports on indian cricketers Dietary Recommendations Tamil News: இந்திய அணி வீரர்களுக்கான உணவுப் பட்டியல் குறித்த எந்தவித உத்தரவையும் பிசிசிஐ வெளியிடவில்லை எனவும், வீரர்கள் விருப்பப்படி சாப்பிடலாம் என்றும் பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
bcci Tamil News: treasurer Arun Dhumal dismisses reports on Halal Meat Controversy

BCCI Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், சமீபத்தில் முடிவடைந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்தியா நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வியாழக்கிழமை கான்பூரில் தொடங்குகிறது.

Advertisment
publive-image

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் முறையாக டெஸ்ட் தொடரில் சந்திக்க இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

publive-image

இந்த நிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான உணவுப் பட்டியலை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹலால் உணவு வகைகளை மட்டுமே அவர்கள் சாப்பிட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

publive-image

இந்நிலையில், இந்திய அணி வீரர்களுக்கான உணவுப் பட்டியல் தொடர்பான உத்தரவுகளை நிராகரித்து பேசியுள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் அத்தகைய உத்தரவு எதையும் வழங்கவில்லை என்றும், வீரர்கள் விருப்பப்படி சாப்பிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக இந்தோ-ஆசிய செய்தி ஊடக நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், " பிசிசிஐ எந்த வீரருக்கோ அல்லது அணியின் ஊழியர்களுக்கோ என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. இந்த வதந்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை.

publive-image

இந்த உணவுப் பட்டியல் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை மற்றும் செயல்படுத்தப்படாது. எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று யாருக்கும் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவுறுத்துவதில்லை. அவர்கள் தங்கள் உணவைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு." என்று கூறியுள்ளார்.

publive-image

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், ஹலால் உணவு வகைகளை மட்டுமே அவர்கள் சாப்பிட வேண்டும் என்றும் பிசிசிஐ உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

publive-image

மேலும், பிசிசிஐயின் இந்த முடிவு நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியது. அதில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை பலர் விமர்சித்தனர். அதோடு ட்விட்டரில் "#BCCI_Promotes_Halal" என்ற ஹேஷ்டேக் டாப் ட்ரெண்டிங் பட்டியலில் உள்ளது. அதில் பலர் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கொடுத்துள்ள விளக்கம் இந்த சர்ச்சைக்கும், பரபரப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Delhi Sports Cricket Indian Cricket Team Indian Cricket Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment