Advertisment

India vs West Indies, 2nd Test Day 3 : இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ்

இந்தியா தனது கிரிக்கெட்டின் வாழ்நாளில் ஒரு அற்புதத்தைக் கண்டுபிடித்தது என்றே சொல்லலாம்....

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India Va west indies Test Match : Bumrah hattrick Wickets

India Va west indies Test Match : Bumrah hattrick Wickets

டெஸ்ட் கிரிக்கெட் :  இந்தியா தனது கிரிக்கெட்டின் வாழ்நாளில் ஒரு அற்புதத்தைக் கண்டுபிடுத்தது என்றே சொல்லலாம். நேற்று, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பும்ரா வீசிய பந்துவீச்சு, டி/20 வாழ்க்கை முறையில் இன்னும்  டெஸ்ட் தொடர்கள் இன்னும் தனக்கான அடையாளங்களை இழக்கவில்லை என்பதனை தெளிவாக காட்டின.

Advertisment

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்று பயணம் செய்து வரும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு டி/20  விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய  அணி வெற்றியடைந்த  நிலையில் ,இரண்டாவது டெஸ்ட் போட்டி கிங்க்ஸ்டனில் ஆகஸ்ட் முப்பதாம் தேதி தொடங்கியது.

இந்த இரண்டாவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 416 ரன்களை குவித்திருந்தது. இதில், அதிகப்பட்சமாக புதிதாய் களமிறக்கப்பட்ட ஹனுமா விஹாரி 111 ரன்களை சேர்த்தார். இது, விஹரியின் முதல் சதம் என்பது குறிப்பிட வேண்டிய விஷயங்களில் ஒன்று. மேலும், விராத் கோலி 76 ரன்களும், அகர்வால் 55 ரன்களும் எடுத்து அணியின் வலுவான நிலைக்கு உறுதுணையாய் இருந்தனர்.

இந்திய அணி என்றால் முதல் நான்கு பேர் மட்டும் அடிப்பார்கள், பிறகு வருபவர்கள் பயங்கரமாய் சொதப்புவார்கள் என்று தான் சொல்லப் பட்டு வந்திருந்தது. ஆனால், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா நேற்றைய ஆட்டத்தில் தனது முதல் அரை சதத்தை நிறைவு செய்தார். 80 பந்துகள் விளையாடிய இஷாந்த் ஷர்மா ஏழு பவுண்டரிகளை விலாசி 57 ரன்னில் பிராத்வெய்ட் பந்தில் வெளியேறினார்.

பின்பு, 416 ரன் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்திய தீவுகள் ஆரம்ப நிலையிலேயே மிகவும் தடுமாறின.அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட்மயர் 34 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேற்கிந்திய தீவுகள் நேற்றைய இரண்டாவது நாள் ஆட நேர முடிவில் 87 ரன்கள் மட்டும் எடுத்து ஏழு விக்கெட்டுகளை பறிக் கொடுத்துவிட்டன. இன்னும் மூன்று நாட்கள் மீதமிருக்கும் நிலையில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு உறுதியாகும் வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.

இந்திய பௌலிங்கில்  பும்ரா வின் மிகவும் அபாரமாகவே இருந்தது. அவர், வீசிய ஒன்பது ஓவர்களில் எதிரணியால்  வெறும் பதினாறு ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால், இதற்கு விலையாக ஆறு விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்தன.

ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் : பிராவோ,ப்ரூக்ஸ்,சேஸ், என்று அடுத்தது ஹாட்ரிக்  விக்கெட்டுகளை எடுத்தார் பும்ரா.

குறிப்பாக, அந்த ஹாட்ரிக் பந்து  மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பும்ரா வின் அப்பீலுக்கு முதலில் நடுவர் இசைவு கொடுக்கவில்லை . பும்ராவும் சற்று தளர்ந்தார் என்றே சொல்ல வேண்டும். பிறகு, கேப்டன் விராட் கோலி பும்ராவை   மறுபரிசீலனைக்கு வலியுறுத்தினார் .  மறுபரிசீலனையின் முடிவில் அது அவுட் என்று உறுதி செய்யப்பட்டது.

 

via Gfycat

இந்த ஓவர், ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களையும் ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும்.  சமூக வலைத்தளங்களில் பும்ரா விற்கு பாராட்டுகளும் குவியத் தொடங்கின.

 

 

 

 

இதற்கு முன், ஹர்பஜன் சிங் மற்றும் இர்பான் பதான் டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் எடுத்திருந்தனர். எனவே, இந்த லிஸ்ட்ல் மூன்றாவது நபராக பும்ரா நேற்று இணைந்தார்.

இன்றைய,  மூன்றாவது நாள் ஆட்டம்  இந்திய நேரப்படி இரவு எட்டு மணிக்கு தொடங்கும். சோனி சேனலில் இந்த போட்டியை நீங்கள் கண்டுக் களிக்கலாம்.  இந்த டெஸ்ட் போட்டியை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் லைவ் அப்டேட்ஸ்  உங்களுக்கு பயனுள்ளதாய் அமையும்.

Bumrah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment