Advertisment

விராட் கோலிக்கு தகுதியிழப்பு புள்ளி வழங்கி எச்சரித்த ஐசிசி - ஏன் தெரியுமா?

இந்திய அணி கேப்டன் விராட் கோலி எச்சரிக்கப்படுகிறார். அதேபோல் வீரர்கள் நன்னடத்தைக்கான விதிமுறையில் முதல் லெவல் குற்றத்தை செய்ததற்காக தகுதி இழப்பிற்கான ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Captain Virat Kohli reprimanded by ICC after physical contact with Beuran Hendricks - விராட் கோலிக்கு தகுதியிழப்பு புள்ளி வழங்கி எச்சரித்த ஐசிசி - ஏன் தெரியுமா?

Captain Virat Kohli reprimanded by ICC after physical contact with Beuran Hendricks - விராட் கோலிக்கு தகுதியிழப்பு புள்ளி வழங்கி எச்சரித்த ஐசிசி - ஏன் தெரியுமா?

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில், ரோஹித் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய கேப்டன் கோலிக்கு, இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஹென்ரிக்ஸ் கடும் நெருக்கடி கொடுத்தார்.

Advertisment

கோலியால் வழக்கம் போல ரொட்டேட் செய்யவும் முடியவில்லை. அடித்து ஆடவும் முடியவில்லை. ஒருக்கட்டத்தில் டென்ஷனான கோலி, ஹென்ரிக்ஸ் ஓவரில் ஒரு ரன் எடுக்க ஓடும்போது, ஆடுகளத்தில் நின்றிருந்த ஹென்ரிக்ஸ் மீது வேகமாக ஒரு இடி இடித்தார்.

ஆனால், இதை கேஷுவலாக எடுத்துக் கொண்ட ஹென்ரிக்ஸ் அதை நடுவரிடம் புகாரளிக்கவில்லை. இந்நிலையில், ஐசிசி விராட் கோலியை எச்சரித்ததுடன், தகுதி இழப்பிற்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஐசிசி தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இந்திய அணி கேப்டன் விராட் கோலி எச்சரிக்கப்படுகிறார். அதேபோல் வீரர்கள் நன்னடத்தைக்கான விதிமுறையில் முதல் லெவல் குற்றத்தை செய்ததற்காக தகுதி இழப்பிற்கான ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

விராட் கோலி இதற்கு முன் இதுபோன்று இரண்டு முறை தகுதி நீக்கத்திற்கான புள்ளிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விதிகள் என்ன சொல்கின்றன?

ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியிழப்பு புள்ளிகளை அடையும் போது, அவை இடைநீக்க புள்ளிகளாக மாற்றப்பட்டு தடை செய்யப்படுவார்

இரண்டு சஸ்பென்ஷன் புள்ளிகள் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி 20 போட்டிகளுக்கு தடை விதிக்க சமமாகும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment