Advertisment

Chennai vs Patna Pro Kabaddi Live Streaming: தமிழ் தலைவாஸ் போட்டியை எங்கு? எப்போது பார்ப்பது?

Chennai vs Patna Pro Kabaddi Match Live Streaming: இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai vs Patna Pro Kabaddi Season 6 Live Streaming:

Chennai vs Patna Pro Kabaddi Season 6 Live Streaming:

Chennai vs Patna Pro Kabaddi Live Streaming : புரோ கபடி லீக் தொடரின் 6-வது சீசன், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (அக்.7) தொடங்குகிறது. முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதுகின்றன.

Advertisment

மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், ‘ஏ’ பிரிவில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், மும்பை, தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தா, நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் சென்னை, சோனிபட், புனே, பாட்னா, நொய்டா, மும்பை, ஆமதாபாத், டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

பிளே-ஆஃப் சுற்று ஆட்டங்கள் கொச்சியிலும், இறுதிப்போட்டி மும்பையில் ஜனவரி 5-ந் தேதியும் நடைபெறுகிறது.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும். அடுத்து எதிர்பிரிவில் உள்ள அணிகளை ஒரு முறை சந்திக்க வேண்டும்.

மேலும் எதிர்பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் வைல்டு கார்டு சுற்றில் விளையாட வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டத்தில் விளையாடும்.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறும்.

தொடக்க சுற்று லீக் ஆட்டங்கள் சென்னையில் இன்று முதல் 11ம் தேதி வரை நடக்கிறது.

PKL Season 6: When & Where to watch Chennai vs Patna Pro Kabaddi Match, Time in IST

முதன்முதலாக 2017ம் ஆண்டு தான் தமிழ் தலைவாஸ் அணி இந்த கபடி தொடரில் களமிறங்கியது. ஆனால், ‘பி’  பிரிவில் கடைசி இடத்தையே அந்த அணி பிடித்தது.

இந்நிலையில், இந்த சீசனில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணியில், மன்ஜீத் சிலார், ஜஸ்விர்சிங், சுகேஷ் ஹெக்டே போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

எனவே, இம்முறை தமிழ் தலைவாஸ் அணி நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியை Star Sports 2 and Star Sports 2 HD சேனலில் கண்டுகளிக்கலாம். இரவு 7.30 மணி முதல் லைவ் ஆரம்பமாகிவிடும். போட்டி எட்டு மணிக்கு தொடங்கும்.

ஆன்லைனில், ஹாட்ஸ்டார் சேனலில் இந்த போட்டியை நேரடியாக காணலாம்.

Sports Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment