பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.
ஏரோஸ்க்கட்டோபார் பால் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக தேசிய அளவிலான ஏரோஸ்க்கட்டோபார் ஸ்கேட்டிங் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்த்தான், பஞ்சாப், மத்திய பிரதேஷ், தெலுங்கானா, ஆந்திரா பிரதேஷ் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருந்து 300 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
தமிழகம் சார்பாக கோவை, திருச்சி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவடங்களிலிருந்து 57 மாணவர்கள் , 17 மாணவிகள் என மொத்தம் 74 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10,12,14,18 வயதினருக்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.
இதில் 18 வயதினருக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மாணவர் அஸ்வின் கலந்துகொண்டார். இவர் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இறுதி போட்டியில் தங்கம் வென்றார். இதன் மூலம் மாணவர் அஷ்வின் ஆசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.

மேலும் இப்போட்டியில் தமிழக அணி மொத்தம் 6 பிரிவுகளில் தங்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil