காமன்வெல்த் 2018: தங்கம் வென்ற சாய்னா நேவால்!

காமன்வெல்த் விளையாட்டில் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தங்கம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் இந்தியாவுக்கு 26வது தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தார்.

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர். இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற மகளிருக்கான பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் பி.வி. சிந்துவை எதிர்த்து களம் இறங்கினார். இந்த போட்டியில் பி.வி.சிந்துவை 21-18, 23-21 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி சாய்னா நேவால் தங்கப்பதக்கம் வென்றார். சிந்துவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

இதன்மூலம் இந்தியா 26 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என 62 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

×Close
×Close