Advertisment

பொல்லார்டை கிண்டல் செய்த வீரர்.. மகளிர் ஹாக்கி அப்டேட்.. மேலும் விளையாட்டு செய்திகள்

ஒடிஸா மாநிலம், புவனேஸ்வரத்தில் நடைபெற இருந்த மகளிர் புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து நெதர்லாந்து அணி விலகிக் கொண்டது.

author-image
WebDesk
New Update
பொல்லார்டை கிண்டல் செய்த வீரர்.. மகளிர் ஹாக்கி அப்டேட்.. மேலும் விளையாட்டு செய்திகள்

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒரு நாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.

Advertisment

இரண்டாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு ஓய்வில் இருந்தார்.

அவருக்கு பதிலாக அணியை நிகோலஸ் பூரன் வழிநடத்தினார்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர்  டுவைன் பிராவே, பொல்லார்டை காணவில்லை என்று ஜாலியாக ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அந்தப் பதிவில், இது உண்மையிலேயே ஒரு சோகமான நாள் நண்பர்களே. எனது சிறந்த நண்பர் கிரன் பொல்லார்டை காணவில்லை நண்பர்களே, உங்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால் தயவுசெய்து எனக்கு மெசேஜ் அனுப்புங்க அல்லது போலீசில் புகார் செய்யவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் போஸ்டரில் பொல்லார்டின் வயது உயரம் கடைசியாக இந்திய வீரர் சாஹல் விக்கெட் எடுத்து போது பார்த்தது போன்ற விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.

இவரை யாராவது கண்டுபிடித்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தகவல் தெரிவிக்குமாறும் வேடிக்கையாக அந்தப் போஸ்டரில்  குறிப்பிட்டுள்ளார்.



மகளிர் புரோ ஹாக்கி லீக்: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து விலகல்

ஒடிஸா மாநிலம், புவனேஸ்வரத்தில் நடைபெற இருந்த மகளிர் புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து நெதர்லாந்து அணி விலகிக் கொண்டது.

பெண்களுக்கான புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

இதில் சமீபத்தில் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்த சீனாவுக்கு எதிரான 2 ஆட்டங்களில் முறையே இந்திய அணி 7-1, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதும் ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வருகிற 19, 20-ந் தேதிகளில் நடக்க இருந்தது. 

தற்போது நெதர்லாந்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்தியாவில் நடக்க இருந்த போட்டியில் இருந்து நெதர்லாந்து அணி விலகி இருக்கிறது.

இந்த தருணத்தில் வேறு கண்டங்களுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று நெதர்லாந்து ஆக்கி சங்க மருத்துவக் குழு அளித்த அறிவுரையைத் தொடர்ந்து வீராங்கனைகளுடன் ஆலோசனை நடத்தி அந்த நாட்டு ஹாக்கி சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. 

தேசிய ஜூனியர் ஹாக்கி பயிற்சி முகாமுக்கு 5 தமிழக வீரர்கள் தேர்வு

சமீபத்தில் கோவில்பட்டியில் 11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி நடந்தது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அணியை சேர்ந்த ஆர்.நிஷி தேவஅருள், வி.அரவிந்த், ஆர்.கவியரசன், பி.சதீஷ், என்.திலீபன் ஆகியோர் தேசிய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் திமுகவின் கனிமொழி எம்.பியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

உலக டென்னிஸ் தரவரிசையில் டாப் 100க்குள் வந்த ஆண்டி முர்ரே!

உலக டென்னிஸ் தரவரிசையில் 2018ம் ஆண்டுக்கு பின், முதன் முறையாக டாப் 100 இடத்துக்குள் வந்துள்ளார். தற்போது அவர் டென்னிஸ் தரவரிசையில் 95வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

நெதர்லாந்தின் ரோட்டர்டேம் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின்  முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இங்கிலாந்து நாட்டின் ஆன்டி முர்ரே, உலக டென்னிஸ் தரவரிசையில் 31ம் நிலை வீரராக உள்ள கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பூப்ளிக்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில், அவர் 7-6 (8/6), 6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் பூப்ளிக்கை தோற்கடித்தார்.

அவர் அடுத்த சுற்று ஆட்டத்தில் உலகின் மூன்றம் நிலை வீரரான கனடாவை சேர்ந்த பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவினார்.

6-3, 6-4 என்ற செட் கணக்கில் அவர் தோல்வியைத் தழுவினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment