Advertisment

சமையல் கலைஞராக மயங்க்: கொரோனா உபயத்தால் வெளியே வரும் கிரிக்கெட் வீரர்களின் அசாத்திய திறமைகள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களிடையே மறைந்து கிடக்கும் விளையாட்டை தவிர்த்த மற்ற திறமைகள், இந்த கொரோனா பாதிப்பிலான ஊரடங்கு உத்தரவின் மூலம் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mayank agarwal, mayank agarwal chef, mayank agarwal lockdown, r ashwin, r ashwin lockdown, r ashwin coronavirus, coronavirus, covid 19, cricket news

mayank agarwal, mayank agarwal chef, mayank agarwal lockdown, r ashwin, r ashwin lockdown, r ashwin coronavirus, coronavirus, covid 19, cricket news

சமையல் கலைஞரான மயங்க் அகர்வால், வீட்டை சுத்தப்படுத்தும் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோர்களின் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகின்றன.

Advertisment

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களிடையே மறைந்து கிடக்கும் விளையாட்டை தவிர்த்த மற்ற திறமைகள், இந்த கொரோனா பாதிப்பிலான ஊரடங்கு உத்தரவின் மூலம் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கிரிக்கெட் உலகமும் தப்பவில்லை. கிரிக்கெட் போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளதால், வீரர்கள் தங்களது வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

விளையாட்டு திறமைகளுக்கு அப்பாற்பட்டு, அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் மற்ற திறமைகள் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர துவங்கியுள்ளன.

இந்திய அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால், பேட்டிங்கில் மட்டுமல்ல சமையலிலும் வெளுத்து வாங்குவார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அவர் செய்த பட்டர் கார்லிக் காளான் மற்றும் பெல் பெப்பர் குயினோ, பார்ப்பவர்களின் வாயிலேயே எச்சில் ஊற வைத்தது.

இந்த டிஷ்களின் செயல்முறையை பிசிசிஐ டிவி சேனலில், அவர் நேரடியாக செய்துகாட்டியதோடு மட்டுமல்லாது, அவரது டுவிட்டர் பக்கத்தில், வாருங்கள் ஆரோக்கியமான டின்னரை பகிர்வோம் என்று தலைப்பிட்டு போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஊரடங்கு உத்தரவை ஒட்டி, மக்கள் பொதுவெளியில் நடமாட வேண்டாம் என்ற பிரதமர் மோடியின் உத்தரவை தொடர்ந்து தங்களது குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் பார்த்துக்கொண்டுள்ளார்.

தானும் வீட்டிலேயே இருப்பதால், வீட்டை துடைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார். கடைக்கு சென்று பலசரக்கு பொருட்களை வாங்குவது போன்ற குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Corona Virus Cricket Ravichandran Ashwin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment