Advertisment

கிரிக்கெட்டில் புகுந்த மதச்சாயம்: பயிற்சியாளர் பதவியை உதறிய வாசிம் ஜாபர்

Former cricketer Wasim jaffar tamil news: மதச் சாயம் பூசியதால் பயிற்சியாளர் பதிவில் இருந்து ராஜினாமா செய்தார் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்

author-image
WebDesk
New Update
Cricket news in tami Communal angle sad, says Wasim Jaffer after quitting as U’khand coach

Cricket news in tamil: உத்தரகண்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தான் வகித்த பதவியை, இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் ராஜினாமா செய்துள்ளார். இதற்கு காரணமாக, தகுதியற்ற வீரர்களை தேர்வு செய்ய சொல்லி உத்தரகண்ட் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் அழுத்தம் தந்தாக அவருடைய ராஜினாமா கடித்ததில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் டிரஸ்ஸிங் ரூமில் வகுப்புவாத வேறுபாடு பார்த்தாகவும், முஸ்லீம் வீரர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும் உத்தரகண்ட் கிரிக்கெட் வாரியத்தின் மாநில செயலாளர் மஹிம் வர்மா தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய வாசிம் ஜாபர், "இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிப்பது எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. எந்த அளவுக்கு ஒருவரை தரக்குறைவாக பேச வேண்டுமோ அந்த அளவிற்கு பேசியுள்ளனர். அதோடு நான் வகுப்புவாத வேறுபாடு பார்த்தேன் என்று கூறுவது எனக்கு மேலும் வருத்தமளிக்கின்றது" என்று கூறியுள்ளார்.

இது பற்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய வர்மா, "உத்தரகண்ட் கிரிக்கெட் அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, ஜாபர் முஸ்லீம் மத தலைவர் (மவ்லாவி) ஒருவரை மைதானத்திற்கு அழைத்து வந்துள்ளார். அதோடு அணியின் அனுமன் வாழ்த்து மந்திரத்தையும் மாற்றியுள்ளார். மற்றும் அவர் டிரஸ்ஸிங் ரூமில் வகுப்புவாத வேறுபாடு பார்த்தாகவும், முஸ்லீம் வீரர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும் அணியிலுள்ள சில அதிகாரிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

டெஹ்ராடூனில் கொரோனா உயிர் தடுப்பு பாதுகாப்பு முறையில் வீரர்கள் இருந்த போது முஸ்லீம் மத தலைவரை அழைத்து வந்து நமாஸ் செய்ய சொல்லி இருக்கிறார். ஒரு மத தலைவர் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை அமலில் உள்ளபோது எப்படி வரக் கூடும்?. இந்த தகவல்களை அதிகாரிகள் முன்னரே தெரிவித்திருந்தால், அவர் மீது அப்போதே நடவடிக்கை எடுத்திருப்பேன்.

அதோடு அவர் தேர்வுக் குழு கூறுவதை ஒரு போதும் செவி கொடுத்து கேட்பதில்லை. ஒரு சந்திப்பின் போது என்னிடம், உங்களுக்கு கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது என்று கூறி இருக்கிறார். அவரது நடத்தை என்னுடன் மட்டுமல்ல, தேர்வுக் குழுவிற்கும் கூட ஒரு பிரச்சினையாக மாறியது. நாங்கள் அவருக்கு அணியில் நிறைய சுதந்திரம் கொடுத்தோம். ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ள விரும்பாமல், அணியின் மொத்த கட்டுப்பாட்டை விரும்பினார் ”என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் கூறும் விதமாக ஜாபர் பின்வருமாறு கூறியுள்ளார்: "நான் முஸ்லீம் மத தலைவர் ஒருவரை அழைத்து நமாஸ் செய்ய சொன்னேன் என்று கூறுகிறார்கள். அவரை நான் ஒரு போதும் அழைக்கவில்லை. அணியில் விளையாடும் இக்பால் அப்துல்லா தான் அவரை அழைத்தார். வெள்ளிக்கிழமை, எங்களுக்கு நமாஸ் வழங்க ஒரு முஸ்லீம் மத தலைவர் தேவை என்று இக்பால் என்னிடம் கேட்டார். நானும் சரி என்று கூறி அனுமதி அளித்தேன். பயிற்சி முடிந்த பிறகு டிரஸ்ஸிங் அறைக்குள் நமாஸ் வழங்கப்பட்டது. இது இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே நடந்தது, அதுவும் கொரோனா உயிர் தடுப்பு பாதுகாப்பு முறை அமல்ப் படுத்துவதற்கு முன்னர் தான்.

அனுமன் வாழ்த்து மந்திரத்தை உச்சரிக்க கூடாது என்று சொன்னேன் என என் மீது குற்றம் சாட்டுகின்றனர். எங்கள் அணியில் அப்படி ஒரு மந்திரமே வீரர்கள் பயன்படுத்தியது கிடையாது. களத்தில் உள்ள வீரர்களை உற்சாகம் செய்யும் "கா மான் உத்தரகண்ட், கோ உத்தரகண்ட்" போன்ற வசனங்களை வீரர்கள் பயன்படுத்த வேண்டும் என்றே கூறியுள்ளேன். நான் வகுப்புவாத வேறுபாடு பார்ப்பவன் என்றால்,

‘அல்லாஹ் ஹு அக்பர்’ என்னும் மந்திரத்தை அல்லவா பயன்படுத்த சொல்லியிருப்பேன். அதோடு காலை வேளையில் பயிற்சியும், மதிய வேளையில் நாமஸும் வழங்கியிருப்பேன் அல்லவா.

உத்தரகாண்ட் அணியில் உள்ள வீரர்கள், நிறைய திறன்களைக் கொண்டுள்ளனர். என்னிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நான் உண்மையிலேயே எதிர்பார்த்தேன். ஆனால் தகுதியற்ற வீரர்களுக்கான தேர்வு விடயங்களில் தேர்வாளர்கள் மற்றும் செயலாளரின் தலையீட்டால் அந்த வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

நான் ராஜினாமா செய்த பிறகு தான் இது போன்ற செய்திகள் வெளியில் வந்தன. இதுபோன்ற செயல்களை நான் செய்கிறேன் என்று அவர்கள் அறிந்திருந்தால், அவர்கள் என்னை முன்னரே பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். இப்போது நான் தான் ராஜினாமா செய்தேன், ”என்று அவர் கூறியுள்ளார்.

வாசிம் ஜாபர் கடந்த ஆண்டு தான் உத்தரகண்ட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் . அவரது ஒப்பந்தம் இந்த சீசனுக்கு மட்டுமே. தொழில்முறை வீரர்களான ஜெய் பிஸ்டா, இக்பால் அப்துல்லா மற்றும் சமத் பல்லா ஆகியோரை உத்தரகண்ட் அணிக்காக மாநிலத்திற்கு வெளியில் இருந்து தேர்வு செய்தார். மும்பை அணியில் விளையாடிய முன்னாள் வீரர் அப்துல்லா செய்யது முஷ்டாக் டி 20 போட்டிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment