Advertisment

டி20 உலக்கோப்பை: இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியது பிசிசிஐ!

Indian cricket team’s new jersey for T20 World Cup Tamil News: இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்ஸியை இன்று அறிமுகம் செய்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

author-image
WebDesk
New Update
Cricket news in tamil: BCCI unveils Team India's new jersey for T20 World Cup

T20 World Cup Tamil News: இந்தியாவில் உருவெடுத்த கொரோனா 2 அலையின் அச்சத்தால் தற்காலிமாக நிறுத்தப்பட்ட 7-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் வரும் 17-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தொடர்ந்து இந்த தொடர் அரங்கேறுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

Advertisment
publive-image

இந்த தொடருக்கான புதிய ஜெர்ஸியை தொடரில் பங்கேற்கவுள்ள அணிகள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்ஸியை இன்று அறிமுகம் செய்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).

இந்த மாதம் 17-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர் நவம்பர் 14-ந்தேதியுடன் நிறைவடைகிறது. வருகிற 18ம் தேதி நடக்கும் இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெற இருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cricket Indian Cricket Team T20 Indian Cricket Worldcup Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment