Advertisment

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி… கேப்டனாக ரஹானே அறிவிப்பு…!

India’s Test squad for NZ series Tamil News: நியூசிலாந்து அணிக்கெதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், துணை கேப்டன் அஜிங்யா ரஹானே முதலாவது டெஸ்டில் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Cricket news in tamil: India’s Test squad for NZ series announced, Ajinkya Rahane to lead

Cricket news in tamil:இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது டி20 போட்டி வருகிற 17-ந்தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது. டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 25 முதல் தொடங்குகின்றன.

Advertisment

ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கெதிரான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வெள்ளிக்கிழமை நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், புதிதாக நியமிக்கப்பட்ட டி20 கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும், கேப்டன் கோலிக்கு முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே முதலாவது டெஸ்டில் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் விராட் கோலி இணைந்து அணியை வழிநடத்துவார்." எனத் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி பின்வருமாறு:

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், எஸ் ஐயர், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஆர். அஷ்வின், அக்சர் படேல், ஜே யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 பின்வருமாறு:

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஷ்வின், அக்சர் படேல் , அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது. சிராஜ்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Vs New Zealand Sports Cricket Indian Cricket Team T20 Tamil Sports Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment