New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/10/tamil-indian-express-2021-10-10T170214.069.jpg)
Shikha Pandey Tamil News: ஆஸ்திரேலிய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் மகளிர் அணி தற்போது அந்த அணிக்கு எதிராக 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் நேற்றைய 2வது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 118 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து 119 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எளிய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பான பந்து வீச்சையே வெளிப்படுத்தி இருந்து. குறிப்பாக முதல் ஓவரை வீசிய இந்திய வீராங்கனை 'ஷிகா பாண்டே' தனது ஸ்விங் பந்துகளால் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளை கதிகலங்க செய்தார். மேலும், அவர் வீசிய 2வது பந்தில் ஆஸ்திரேலியாவின் 'அலிசா ஹீலி' கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். ஆடுகளத்தில் மிகவும் துல்லியமாக ஸ்விங் ஆனா இந்த பந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது.
தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணைய பக்கங்களை கலக்கி வருகிறது. மேலும், இப்படி ஒரு பந்து வீச்சை யாராலும் அவ்வளவு எளிதில் வீசி விட முடியாது என்றும், இந்த இன் ஸ்விங்கிங் பந்து நூற்றாண்டின் சிறந்த பந்து என்றும் பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
What a ball from Shikha Pandey, It was a ripper !!!#ShikhaPandey #AUSvIND#AUSvsIND #INDvsAUSpic.twitter.com/7VfeQaDq1l
— ABDULLAH NEAZ (@AbdullahNeaz) October 9, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.