டாஸில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன்… யாரா இருக்கும்?

Top 4 successful indian cricket captains at toss Tamil News: இந்திய கிரிக்கெட் அணியை இதுவரை வழிநடத்திய கேப்டன்களில் டாஸ் வெல்வதில் கில்லியாக இருந்த கேப்டன்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

Cricket news in tamil: Top 4 successful indian cricket captains at toss

Cricket news in tamil: கிரிக்கெட்டில் டாஸ் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. அதிலும் சர்வதேச போட்டிகளில் இதற்கென தனி மதிப்பே உள்ளது. ஏனென்றால், போட்டி நடக்கவுள்ள மைதானத்தின் தன்மை, சூழ்நிலை போன்றவை களமிறங்கவுள்ள அணியிரானால் முன்கூட்டியே கணிக்கப்படுகிறது. இது தவிர ஆடுகளத்தின் அப்போதைய நிலை குறித்து ஆராய ஒரு குழுவே உள்ளது. இதனால் டாஸ் ஜெயித்தால் பேட்டிங் அல்லது பந்து வீச்சை தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவுடனே கேப்டன்கள் களமிறங்குகிறார்கள்.

இது ஒரு புறமிருக்க, இந்திய கேப்டன்களில் டாஸ் வெல்வதில் கில்லியாக இருந்த கேப்டன்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

மகேந்திரசிங் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக வலம் வருபவர் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. அனைத்து தர போட்டிகளிலும் வெற்றியை தேடி தந்த தோனி டாஸ் விஷயத்தில் கோட்டையை தான் விட்டுள்ளார். இவரின் டாஸ் வெற்றி பெறும் சதவீதம் 47.59 ஆக உள்ள நிலையில், 158 முறை டாஸ் வென்றும், 174 முறை அதில் தோல்வியை தழுவியும் உள்ளார்.

சவுரவ் கங்குலி

இந்திய அணியை கட்டமைப்பதில் பெரிதும் பங்காற்றிய முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமாக உள்ள சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் அணியை195 சர்வதேச போட்டிகளுக்கு வழிநடத்தி சென்றுள்ளார். அதில் 100 போட்டிகளின் டாஸில் தோல்வியுற்ற இவர், 95 போட்டிகளில் வென்றுள்ளார். இவரின் டாஸ் வெல்லும் சராசரி 48.1 ஆக உள்ளது.

ராகுல் டிராவிட்

இந்திய அணியை குறுகிய காலமே வழிநடத்திய ‘கட்டை மன்னன்’ ராகுல் டிராவிட் டாஸ் வெல்வதில் கில்லியாகவே இருந்துள்ளார். அவர் தலைமை தாங்கிய 104 போட்டிகளில் 61 முறை டாஸ் வென்றும், 43 முறை தோற்றும் உள்ளார். அதோடு இவரின் டாஸ் வெல்லும் சதவீதம் 58.65 ஆக உள்ளது.

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியை 3 பார்மெட்டுகளிலும் தலைமை தாங்கி வழிநடத்தி வரும் இந்திய அணியின் இந்நாள் கேப்டன் விராட் கோலி இதுவரை 240 போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். அதில் 85 முறை டாஸ் வென்றும் உள்ளார்.

இருப்பினும், இவருக்கும் டாஸ்க்கும் பொருத்தமே இல்லை எனலாம். ஏனென்றால், இவரின் டாஸ் வெல்லும் சதவீதம் 35 ஆகவும், தோல்வி பெறும் சதவீதம் 65 ஆகவும் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cricket news in tamil top 4 successful indian cricket captains at toss

Next Story
ஓ இதான் டு பிளெசி டாட்டூ ரகசியமா…!Cricket news in tamil: Secrets behind faf du plessiss tattoos
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com