Advertisment

வரலாறு படைத்த வார்னர்... 100வது டெஸ்ட் போட்டியில் இப்படியொரு சாதனையா...!

தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் மற்றும் முதல் ஆஸ்திரேலிய வீரர் ஆனார் டேவிட் வார்னர்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cricket news tamil; David Warner hits 100 in 100th Test, AUS vs SA

David Warner celebrates his 100th Test with a brilliant century Tamil News

AUS vs SA, David Warner Tamil News: ஆஸ்திரேலிய மண்ணில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 21 ஆம் தேதி முதல் தொடங்கியது. பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisment

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேற்று (திங்கள் கிழமை) மெல்போர்னில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 1 ரன்னிலும், பின்னர் வந்த லபுஸ்சேன் 14 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். தற்போது வார்னர் - ஸ்மித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு 100-வது டெஸ்ட் ஆகும். ஸ்மித் ஜோடி சேர்ந்து நேர்த்தியாக ரன்களை சேர்த்த அவர் சதம் விளாசி மிரட்டினார். இந்த அசத்தல் சதம் மூலம் வார்னர் தனது 100வது டெஸ்ட் போட்டியில் தனது 25வது சதத்தை அடித்து அசத்தியுள்ளார். மேலும், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்த 8வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

publive-image

அதோடு, 2020 ஜனவரிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டேவிட் வார்னர் அடித்துள்ள முதல் சதம் இதுவாகும். இதன் மூலம் 2 ஆண்டுகள் தான் சதம் விளாசத சத தாகத்தை தீர்த்துக் கொண்டார்.

தொடர்ந்து அவர் தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 254 பந்துகளில் வார்னர் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 200 ரன்கள் எடுத்தார். இந்த அசத்தல் இரட்டை சதம் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இரட்டை சதம் விளாசிய 2வது வீரர் மற்றும் முதல் ஆஸ்திரேலிய வீரர் ஆனார் டேவிட் வார்னர்.

பிறகு சோர்வுற்ற வார்னர் 200 ரன்கள் குவித்த பிறகு காயம் காரணமாக ஓய்வு எடுக்க செல்வதாக அறிவித்தார்.

வார்னர் படைத்த புதிய சாதனைகள்

36 வயதான வார்னர், தனது 100வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், டெஸ்ட் வரலாற்றில் இப்படியொரு சாதனையை நிகழ்த்திய 10வது வீரர் மற்றும் இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையப் பெற்றுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது 100வது டெஸ்டில் இரண்டு சதங்கள் அடித்து இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்டன் க்ரீனிட்ஜுக்குப் பிறகு, தனது 100வது ஒருநாள் மற்றும் 100வது டெஸ்ட் ஆகிய இரண்டிலும் சதம் அடித்த இரண்டாவது வீரர் ஆனார் வார்னர்.

வார்னரின் சமீபத்திய டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்ம் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இதேபோல், அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 27 இன்னிங்ஸ்களில் மூன்று இலக்க ரன்களை தாண்டாமல் இருந்து வந்தார். தற்போது அவையனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வார்னர்.

publive-image

கடந்த 2011 ஆம் ஆண்டு டெசர்வதேச டெஸ்ட் அரங்கில் அறிமுகமான வார்னர், 8000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்த சாதனைக்கு எட்டிப்பிடிக்கும் எட்டாவது ஆஸ்திரேலிய வீரர் ஆனார்.

வார்னரின் 25 டெஸ்ட் சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து தொடக்க வீரர்களிலும் ஐந்தாவது இடத்தில் அவரை வைக்கிறது. இந்தப் பட்டியலில் வார்னரை விட சுனில் கவாஸ்கர் (33), அலஸ்டர் குக் (31), மேத்யூ ஹெய்டன் (30), கிரேம் ஸ்மித் (27) ஆகியோர் மட்டுமே முன்னிலையில் உள்ளனர்.

வார்னர் (45) விராட் கோலிக்கு (72) அடுத்தபடியாக, சுறுசுறுப்பான வீரர்களில் இரண்டாவது அதிக சர்வதேச சதங்களைப் பெற்றுள்ளார். மேலும் அவர் சச்சின் டெண்டுல்கரை (45) அனைத்து வடிவங்களிலும் அதிக சதம் விளாசிய தொடக்க ஆட்டக்காரராக சமன் செய்துள்ளார்.

100வது டெஸ்டில் சதம் விளாசிய வீரர்கள் பட்டியல்:

  1. கொலின் கௌட்ரே - 104 - இங்கிலாந்து எதிராக ஆஸ்திரேலியா, 1968
  2. ஜாவேத் மியாண்டட் - 145 - பாகிஸ்தான் v இந்தியா, 1989
  3. கோர்டன் கிரீனிட்ஜ் - 149 - வெஸ்ட் இண்டீஸ் v இங்கிலாந்து, 1990
  4. அலெக்ஸ் ஸ்டீவர்ட் - 105 - இங்கிலாந்து v வெஸ்ட் இண்டீஸ், 2000
  5. இன்சமாம்-உல்-ஹக் - 184 - பாகிஸ்தான் v இந்தியா, 2005
  6. ரிக்கி பாண்டிங் - 120 மற்றும் 143* - ஆஸ்திரேலியா v தென் ஆப்பிரிக்கா, 2006
  7. கிரேம் ஸ்மித் - 131 - தென்னாப்பிரிக்கா v இங்கிலாந்து, 2012
  8. ஹசிம் ஆம்லா - 134 - தென்னாப்பிரிக்கா v இலங்கை, 2017
  9. ஜோ ரூட் - 218 - இங்கிலாந்து v இந்தியா, 2021
  10. டேவிட் வார்னர் - 100* - ஆஸ்திரேலியா v தென் ஆப்பிரிக்கா, 2022

தொடக்க ஆட்டக்காரராக அதிக டெஸ்ட் சதங்கள்:

  1. சுனில் கவாஸ்கர் - 203 இன்னிங்ஸ்களில் 33
  2. அலஸ்டர் குக் - 278 இன்னிங்ஸ்களில் 31
  3. மேத்யூ ஹைடர்ன் - 184 இன்னிங்ஸில் 30
  4. கிரேம் ஸ்மித் - 196 இன்னிங்ஸில் 27
  5. டேவிட் வார்னர் - 181 இன்னிங்ஸில் 25

அனைத்து வடிவங்களிலும் ஓப்பனராக அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியல்:

  1. 45 - டேவிட் வார்னர்*
  2. 45 - சச்சின் டெண்டுல்கர்
  3. 42 - கிறிஸ் கெய்ல்
  4. 41 - சனத் ஜெயசூர்யா
  5. 40 - மேத்யூ ஹைடன்

வார்னருக்கு குவியும் பாராட்டுக்கள்:

வார்னர் தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ள நிலையில், அவருக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket Australia David Warner South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment