Advertisment

பயோ-பபிள் சோர்வு... பணிச்சுமை... சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ புதிய திட்டம்...!

Bio-bubble fatigue: BCCI will take the lead in resting players Tamil News: நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முன்னணி வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் கோலிக்கும் ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cricket Tamil News: Bio-bubble fatigue, BCCI will take the lead in resting players

Cricket Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்க உள்ள இந்திய டி20 அணியை நேற்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு (பிசிசிஐ)  வெளியிட்டது. அதன் இந்திய டி20 அணியை மூத்த வீரர் ரோகித் சர்மா வழிநடத்துகிறார். கேஎல் ராகுல் துணை கேப்டனாக செயல்பட இருக்கிறார். 

Advertisment

ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஆர் யுஸ்வேந்திர சாஹல் அஸ்வின், அக்சர் படேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ் ஆகிய இளம் வீரர்களை கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட்... 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப்பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் முதல் ராகுல் டிராவிட் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார். இந்த மாத தொடக்கத்தில் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் முன் ஆஜரான ராகுல் டிராவிட், இந்திய முன்னணி வீரர்களின் பயோ-பபிள் சோர்வு மற்றும் பணிச்சுமை மேலாண்மையை மதிப்பீடு குறித்து பிசிசிஐ-யிடம் குறிப்பிட்டு பேசியுள்ளார். 

தற்போது வரை, ஒரு தொடரில் விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும்படி தேர்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தவிர, இந்திய அணி  டி20 உலகக் கோப்பையில் இருந்து அணி முன்கூட்டியே வெளியேறுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக சோர்வு பட்டியலிடப்பட்டுள்ளதால், அதிக பணிச்சுமை கொண்ட வீரர்களின் மன நலனில் பயோ-பபிள் பாதிப்பை ஏற்படுத்துவதைத் தடுக்க பிசிசிஐ விரும்புகிறது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

சீனியர் வீரர்களுக்கு ஓய்வு 

ஜெய்ப்பூரில் நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முன்னணி வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் கோலிக்கும் ஓய்வு அளிக்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“கிரிக்கெட் எவ்வளவு விளையாடப்படுகிறது என்பதைப் பொறுத்து எந்த வீரருக்கு ஓய்வளிக்க வேண்டும் என்பதை பிசிசிஐ முடிவு செய்யும். சோர்வு பிரச்சினையை நாங்கள் அறிவோம். ஏற்கனேவே ஓய்வில் உள்ள வீரருக்கு அணியில் இடம் கிடைக்கும். ஆனால் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும்" என பிசிசிஐ அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, அணியின் பயிற்சியாளர், அணியைத் தேர்ந்தெடுக்கும் முன், பிசிசிஐயுடன் மதிப்பீடு செய்து விவாதிக்கப்படும் என்றும் அப்போது வீரர்களின் உடற்தகுதி அறிக்கையை புதிய பயிற்சியாளரான ராகுல் டிராவிட் சமர்ப்பிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ரோகித் சர்மா, கே.எல். ராகுல், கோலிக்கு ஒரே நேரத்தில் ஓய்வு இல்லை 

தொலைக்காட்சி ஒளிபரப்பாளரைக் கருத்தில் கொண்டு, தொடருக்காக களமிறங்கும் அணிகள் இரண்டாவது வரிசைப் பக்கங்களாக இருக்காது. எடுத்துக்காட்டாக, டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவின் முதல் மூன்று முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரே தொடருக்கு ஓய்வு அளிக்க வாய்ப்பில்லை.

இந்த மூன்று வீரர்களும் கடந்த ஜூன் மாதம் முதல் இந்திய அணியில் இருந்து விளையாடி வருகின்றனர். குறிப்பாக ரோகித் சர்மா, கோலி, பும்ரா மற்றும் ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள்,  இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் போதும்,  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஐபிஎல் தொடரின் போதும் அதிரடியாக விளையாடி இருக்கின்றனர். இந்த இவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும் ஒரே நேரத்தில் வழங்கப்படாது என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

இந்திய அணியின் அட்டவணை

இந்திய அணி இம்மாத இறுதியில்  நியூசிலாந்துக்கு எதிராக 3 டி20 மற்றும் 2  டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தொடர்ந்து டிசம்பரில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 

தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு, பிப்ரவரியில்  வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அந்தத் தொடர் பிப்ரவரி 20 ஆம் தேதி முடிவடைந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, மார்ச் 18 வரை இந்தியா மற்றொரு தொடரில் இலங்கையை எதிர்கொள்கிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Virat Kohli Sports Rohit Sharma Cricket Indian Cricket Team T20 Indian Cricket Tamil Cricket Update Ravindra Jadeja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment