Advertisment

'ரவி சாஸ்திரிக்கு பிறகு அந்த பதவிக்கு சரியான ஆள் ராகுல் டிராவிட் தான்' - முன்னாள் பயிற்சியாளர் பாரத் அருண்!

Rahul Dravid is the right man to take over from Shastri says bowling coach Bharat Arun Tamil News: இந்திய அணி, இன்று டெஸ்ட் விளையாடும் அணிகளில் சிறந்த அணி என்கிற பெருமையை பெற கோலி மற்றும் சாஸ்திரி கூட்டணி ஒரு முக்கிய காரணம் என முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Cricket Tamil News: former India bowling coach Bharat Arun latest interview tamil

 Former India bowling coach Bharat Arun Tamil News: உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி பல சாதனைகளை பதிவு செய்த அணியாகவே வலம் வருகிறது. தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி வழிநடத்திய இந்திய அணி ஐசிசி தொடர் கோப்பையை வெல்லவில்லை என்றாலும், அயல்நாட்டு தொடர்களில் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக டெஸ்ட் தொடரில் 2021ம் ஆண்டில் அதிக ஆதிக்கம் செலுத்திய அணியாக இந்தியா உள்ளது.

Advertisment

இதற்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி ஒரு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தாலும், பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் இல்லையென்றால் அது சாத்தியப்பட்டிருக்காது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். அவர்களை இந்திய அணியின் முகாமில் பட்டை தீட்டியவர் இந்த பாரத் அருண் தான். தற்போது அவரின் பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில் ஓய்வில் இருக்கிறார்.

publive-image

முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருணுடன் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸின்' ஸ்ரீராம் வீரா நடத்திய உரையாடல் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

2017ம் ஆண்டு மீண்டும் அணியில் இணைந்தபோது உங்களுக்கு கிடைத்த செய்தி என்ன?

2017ல் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளரராக நான் பொறுப்பேற்ற போது விராட் கோலியும், ரவி சாஸ்திரியும் ஒரு டெஸ்ட் அணிக்கான படையை உருவாக்க வேண்டும் என்று கூறினர். அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

அவ்வாறு செய்ய, நாம் என்ன செய்ய வேண்டும்? 20 விக்கெட்டுகளையும் எடுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஐந்து பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாட வேண்டும். 2014ல் எனது முதல் குறுகிய காலத்தில் பந்துவீச்சாளர்களை நான் ஏற்கனவே கவனித்தேன். மேலும் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்தேன். ஒரு மாபெரும் டெஸ்ட் அணியாக மாறுவதற்கு அந்த நேரத்தில் தேவையான நிலைத்தன்மை எங்களுக்கு இல்லை. கூடுதல் பேட்ஸ்மேனை விட, கூடுதல் பந்துவீச்சாளருடன் செல்வோம் என்பதில் கோலியும் சாஸ்திரியும் தெளிவாக இருந்தனர்.

கோலி சொன்னது எனக்கு நினைவிருக்கிறது, “பேட்ஸ்மேன்களின் சுமைகளை கொஞ்சம் குறைத்துக்கொள்வோம். நாங்கள் அனைவரும் நன்றாக செயல்படுகிறோம். எனவே, பேட்டிங் செய்ய நாங்கள் ஆறு பேர் போதும். திறன்கொண்ட பந்து வீச்சாளர்களுடன் நாம் களமிறங்குவோம்." அதிக விக்கெட்டுகளை எடுப்பதன் மூலமோ அல்லது ரன் ஓட்டத்தைத் தடுத்து எதிரணிக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாக அந்த அணி இன்னும் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும். இந்த அழுத்தத்தை உருவாக்க, நிலைத்தன்மை முக்கியமானது. அதை நாங்கள் வலைபயிற்சியில் தொடங்கினோம். அதற்கு எங்களிடம் விதிவிலக்கான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர்.

உங்கள் பயிற்சி மற்றும் பந்துவீச்சு தத்துவம் என்ன?

எனது முக்கிய நோக்கம் பந்து வீச்சாளர்களை அவர்களின் கம்ஃபர்ட் சோன்னில் இருந்து வெளியேற்றி அவர்களை புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சிக்க வைப்பது ஆகும். ஒவ்வொரு பந்து வீச்சாளரும் அவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்; பந்து அவரது கையிலிருந்து வெளியேறிய பிறகு ஏன் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்து கொள்கிறது? என்ன நடக்கிறது? அவர் பந்தை எப்படி அடக்கி கட்டுப்படுத்த முடியும்? தெளிவில்லாத 'இயற்கை' வழியை விட, அவர் எப்படி திட்டமிட்ட செயலாக மாற்ற முடியும்? பலம் மற்றும் பலவீனங்கள், அதனால் நீங்கள் போட்டியில் உங்களின் பலத்தை கடைபிடித்து, பலவீனங்களை நீக்குங்கள் என்று கூறுவேன்.

மேலும், 150 ஆண்டுகளில் வெளிப்படையாக மாறாத பந்துவீச்சின் அடிப்படைகளுக்கு நெருக்கமாக அனைவரின் தனித்துவமான பாணியைப் புரிந்துகொள்வதே சவாலாகும். அவர்களின் முக்கிய பங்கு ஆயுதத்தைச் சுற்றி வேலை செய்ய சில மாறுபாடுகளை உருவாக்க வேண்டும். அதனால் அவர்கள் ஒரு மந்திரத்தை உருவாக்க முடியும். ஒரு ஸ்பெல் மூலம் பேட்ஸ்மேன்களை எப்படி நிலைகுழைய செய்வது என்கிற மந்திரத்தை உருவாக்கும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.

அஸ்வின் நீங்கள் பணி செய்ய மகிழ்ந்த ஒரு வீரர், இல்லையா?

ஓ ஆமாம். அதிக மகிழ்ச்சி. அஸ்வினுடனான எனது உரையாடல்களை நான் மிகவும் ரசித்த ஒன்று. அவர் உங்களிடம் நிறைய கேள்விகளைக் கேட்பார், அதற்கு உறுதியான பதிலைக் கூறுவார் - அவர் மிகவும் புத்திசாலியானவர். அவரிடம் பேசும்போது நான் எனது அறிவை ஆழமாக ஆராய வேண்டியிருந்தது. அவரிடமிருந்து சுழலின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டது மிகவும் வளமான அனுபவமாக இருந்தது. பயிற்சியின் ஒரு பகுதி பந்து வீச்சாளர்களிடமிருந்தும் கற்றுக்கொள்வதை நான் காண்கிறேன். புவனேஷ்வர் குமாரின் நக்கிள் பந்து போல. அவர்கள் அதை எப்படி செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காக, அதன் நுணுக்கங்களை இன்னொருவருக்கு நான் கற்பிக்க முடியும்.

அஸ்வினின் சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் என்ன சாதித்திருந்தாலும், அவர் தனது கம்ஃபர்ட் சோன்னில் இருந்து வெளியே வர பயப்பட மாட்டார். இது அவரது ஆளுமையின் இயல்பான பகுதியாகும்.

ரவீந்திர ஜடேஜா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஜடேஜா இந்தியாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம். 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து, அவர் ஒரு பேட்ஸ்மேனாக அழகாக முதிர்ச்சியடைந்தார். அவரது பந்துவீச்சு ஒரு அழகான ரிதம், இப்போது ஒரு பேங்கர் பந்துவீச்சாளர். விக்கெட் அல்லது ஆடுகளம் கொஞ்சம் உதவி இருந்தால், அவர் மிகவும் ஆபத்தானவர். மேலும் அவர் களத்தில் என்ன ஆற்றலைக் கொண்டு வருகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மொத்தத்தில் அவரது சுழல் நன்றாக இருக்கிறது, அக்சர் படேலும் நன்றாக வருகிறார், குல்தீப் மீண்டும் வருவார்.

publive-image

கிடைத்த சிறிய வாய்ப்பில், ஷர்துல் தாக்கூர் சூப்பராக வருகிறார். அழுத்தத்தை அவர் எவ்வளவு நன்றாக சமாளித்து அந்த இடத்தை பிடித்தார் என்பதை கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு போட்டியிலும், மிகப்பெரிய முன்னேற்றம் காண்கிறார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என அசத்துகிறார். பிரிஸ்பேன் மற்றும் ஓவலில் நாக்ஸ் அற்புதமாக இருந்தது, இல்லையா? மேலும் அவர் ஒரு அழகான புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர். 140 கிமீ வேகத்தில் ஒரு அழகான அவுட்ஸ்விங்கர் மற்றும் நன்கு இயக்கப்பட்ட பவுன்சர்களை வீசி அசத்துகிறார். அவர் ஒரு நல்ல சிந்தனையாளர், மனதில் பட்டதை சொல்ல பயப்படாதவர், பயமற்றவர், இந்த சூழலில் அவரைப் போன்ற வீரர்கள் தேவை.

சாஸ்திரி-கோலி பார்ட்னர்ஷிப்பை நீங்கள் அருகில் இருந்து பார்த்தீர்கள். அவர்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது. கோலியை எப்படி பார்த்தீர்கள்?

publive-image

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரர் விராட் கோலி. இந்திய அணி, இன்று டெஸ்ட் விளையாடும் நாடாக இருக்கும் பெருமை கோலி மற்றும் சாஸ்திரியைச் சேரும். இது ஒரே இரவில் நடக்கவில்லை. அவர்களுக்கிடையே எண்ணற்ற உரையாடல்களை நான் பார்த்திருக்கிறேன். அங்கு அவர்கள் டெஸ்ட் நம்பர் 1 ஆக வர எப்படி திட்டமிடுவார்கள் என்பதையும் பார்த்திருக்கிறேன். அந்த இலக்கை வைத்திருப்பதில் வெட்கப்படவோ அல்லது தற்காத்துக்கொள்ளவோ ​​தேவையில்லை என்று அணியை எப்படி தீவிரமாக சிந்திக்க வைப்பது என்பதையும் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.

வெளிநாடுகளில் வெற்றி பெற வேண்டும். ஆதிக்க அணியாக இருக்க வேண்டும் என்பதே விராட் மற்றும் ரவியின் ஆர்வமாக இருந்தது. மேலும் இந்த அணியை எல்லா இடங்களிலும் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக உருவாக்க அவர்கள் விரும்பினர். நாங்கள் எங்களின் அனைத்து இலக்குகளையும் அடைந்துவிட்டோம் என்று நான் கூறவில்லை, ஆனால் நாங்கள் அணி இருந்த இடத்தை விட சிறந்த இடத்தில் விட்டுவிட்டோம். உலகில் முதன்மையான அணி என தொடர்ந்து ஐந்து வருடங்கள் இந்தியா சாதனை படைத்தது.

publive-image

விராட் மிகவும் ஆக்ரோஷமான கேப்டனாக இருந்தார். மற்ற எந்த பேட்டிங் அல்லது பந்துவீச்சு திறனைப் போலவே, அவரது கேப்டன்ஷியும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் நம்பிக்கையில் இருந்து மேம்பட்டது. நாங்கள் தவறுகளைச் செய்துள்ளோம், அதிலிருந்து கற்றுக்கொண்டோம். பல ஆண்டுகளாக, அவரது கேப்டன்சி உண்மையில் மேம்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு, ஆற்றல் மற்றும் உலகின் சிறந்த அணியாக இருக்க வேண்டும் என்ற லட்சியம் ஒரு அற்புதமான கலவையாக இருந்தது. அந்த எண்ணம், மேன்மை அடைய வேண்டும் என்ற ஆசை அவருக்கு இல்லாவிட்டால், இன்று நாம் இந்த நிலையில் இருந்திருக்க மாட்டோம்.

ஐந்து பந்து வீச்சாளர்கள் கோட்பாட்டைப் பற்றி விராட் ஒருபோதும் பயப்படவில்லை. பேட்ஸ்மேன்கள் பொறுப்பை ஏற்கட்டும். நாம் அதை செய்ய வேண்டும். நாம் என்ன செய்தாலும் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். நான்கு பந்து வீச்சாளர்கள் ஒரு சில டெஸ்டில் இதைச் செய்திருப்பார்கள் ஆனால் அதைத் தக்கவைப்பது கடினமாக இருந்திருக்கும். பந்து வீச்சாளர்களுடன் சேர்ந்து பந்துவீச்சுத் திட்டங்களைப் பற்றி விவாதிக்க கோஹ்லியும் அங்கு இருப்பார். கேப்டன், பந்துவீச்சாளர்கள், தலைமை பயிற்சியாளர் மற்றும் நான் - நாம் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும்.

சாஸ்திரி என்ன மதிப்புகளை அணிக்கு கொண்டு வந்தார்?

அச்சமின்மை மற்றும் நேர்மை. அவர் தலைமை பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் அணிக்கென அஜெண்டா கிடையாது. முடிவுகள் சரியாகவோ அல்லது தவறாகவோ இருந்திருக்கலாம், அது பொருத்தமற்றது. ஆனால் அவை சரியான இடத்திலிருந்து வந்தவை, அணி மதிப்புகள் மற்றும் ஒரு அணியாக நாங்கள் எதற்காக நிற்கிறோம் என்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். நேர்மை என்பது விமர்சனம், சுயபரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கியது. நாங்கள் குழப்பிவிட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று அணியினரிடம் கூறுவதில் இருந்தது. இது அணியை மேம்படுத்த எங்களுக்கு உதவியது.

பதவிக்காலத்தில் சில நுட்பமான தருணங்கள் இருந்தன. கோலி கேப்டனாக ஆனபோதும் தோனி அவருடன் இருந்தார். அப்போது சாஸ்திரி கோலியிடம் என்ன சொன்னார்?

publive-image

தோனி போன்ற மூத்த வீரர் அணியில் இருப்பதன் முக்கியத்துவத்தை ரவி அவரிடம் தெரிவித்தார். இது நிறைய மரியாதை கொடுப்பது மற்றும் அவர் நிச்சயமாக அவருக்கு உதவுவார். கோலி நிச்சயமாக அதைப் புரிந்துகொண்டார் அது ஒரு தடையற்ற மாற்றம். கோலி அடிக்கடி தோனியை சிறிய விவரங்களைக் கையாள அனுமதிப்பது மற்றும் ஒருநாள் போட்டிகளில் எல்லையில் சுழற்றுவது போன்ற மரியாதையை நீங்கள் காணலாம். நம்பிக்கையும் மரியாதையும் இல்லாமல் இதுபோன்ற விஷயங்கள் நடந்திருக்காது. தோனியும் தனக்கு இடம் கொடுக்கப்பட்டதை பார்த்து நன்றாக பதிலளித்தார்.

இரண்டாவது சமீபத்தில் ரோகித் ஷர்மாவின் பங்கு அதிகரித்தது. அது எப்படி இருந்தது?

அணிக்கு வெளியில் இருந்து புயல் வீச தொடங்கி இருந்து. எனினும், இந்த இருவரும் ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான மரியாதை கொண்டவர்களாக இருந்தனர். மற்றும் தொடர்ந்து உரையாடல் நடந்தி நாம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால், சாதிக்க ஒரு குழு நல்ல இணக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தனர். அது இருந்தது.

எதிர்நோக்கக்கூடிய புதிய பந்துவீச்சாளர்கள் யார்?

பிரசித் கிருஷ்ணா அழகாக பந்துவீசுகிறார். அவேஷ் கான் ஒரு நல்ல வாய்ப்பாகத் தெரிகிறார். மேலும், உம்ரான் மாலிக் இளமையாகவும், ராவான பந்துவீச்சையும் வெளிப்படுகிறார். மேலும், தோற்றத்தில் சுவாரஸ்யமாகவும் இருக்கிறார். தாக்கூர் மற்றும் சிராஜ் இன்னும் இளமையாகவும் புதியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

சுழலில், வேகத்தில் இருந்ததைப் போல பல புதிய முகங்கள் தோன்றுவதை நான் பார்த்ததில்லை. ஆனால் அஷ்வின், ஜடேஜா, அக்சர் மற்றும் குல்தீப் மீண்டும் அசத்துவார்கள் என நம்பிக்கையுள்ளது.

புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பற்றி உங்கள் கருத்து என்ன?

டிராவிட் அற்புதமானவர் மற்றும் சாஸ்திரியிடமிருந்து பொறுப்பேற்க சரியான ஆள் அவர் தான். மேலும் பராஸ் நல்லவர் மற்றும் டிராவிட்டுடன் சிறந்த பணி உறவைக் கொண்டுள்ளார். அவர்கள் ஒரு சிறந்த பணியை செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் என்னை ஏதாவது ஒன்றுக்கு பயன்படுத்த விரும்புகிறார் என்றால் நான் எப்போதும் அதற்கு தயாராக உள்ளேன்.

இறுதியாக, வீரர்கள் ஸ்டம்புகள், பந்துகள் மற்றும் பொருட்களை நினைவுப் பொருட்களாக எடுத்துக்கொள்கிறார்கள். இந்த பதவிக்காலத்தில் உங்களிடம் என்ன நினைவு பரிசுகள் உள்ளன?

ஆட்டோகிராப் செய்யப்பட்ட சட்டைகள். ஒரு பந்துவீச்சு பயிற்சியாளராக, நான் என் எடையை இழுத்து சில பந்துகளை கைப்பற்றியிருக்க வேண்டும்! (சிரிக்கிறார்) ஆனால் நான் செய்யவில்லை. அனைத்து பந்துவீச்சாளர்கள் மற்றும் வீரர்களின் சட்டைகள் மற்றும் மகிழ்ச்சியான நினைவுகள். நான் இதற்கு மேல் என்ன கேட்க முடியும்?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Virat Kohli Sports Cricket Indian Cricket Team Indian Cricket Captain Virat Kholi Ravi Shastri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment