Advertisment

இலங்கை தேசியக் கொடியை கையில் ஏந்திய கவுதம் காம்பீர்: நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்ஸ்

Gautam Gambhir shared a video of he holding Sri Lanka's flag on Twitter; goes viral in internet Tamil News: இலங்கை - பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு பிறகு மைதானத்திற்குள் புகுந்த கம்பீர், இலங்கையின் கொடியை ஏந்தி அசைத்தார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Cricket video news: Gambhir holding SL flag after Asia Cup final win vs Pak, netizens reactions

Gautam Gambhir - Sri Lanka flag after Asia Cup final win vs Pakistan Tamil News

Gautam Gambhir Tamil News: ஐக்கிய அரபு மண்ணில் கோலாகலமாக நடைபெற்று வந்த 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இத்தொடருக்கான இறுதிப்போட்டி நேற்றிரவு 7:30 மணிக்கு துபாயில் நடந்தது. இதில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisment

இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி, 8.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 58 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது. இந்த தருணத்தில் பேட்டிங் செய்த பனுகா ராஜபக்சா - ஹசரங்கா ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடியில் ஹசரங்கா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்து அசத்திய பனுகா ராஜபக்ச 45 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹரிப் ரவுப் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து, 171 ரன்கள் எடுத்தால் ஆசிய கோப்பையை முத்தமிடலாம் என்கிற வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. மேலும். இலங்கை அணி விரித்த சுழல் வலையில் லாவகமாக சிக்கிய பாகிஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டது.

பாகிஸ்தான் அணி தரப்பில் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் விளாசிய அரை சதம் (55) வீணானது. இலங்கை அணி தரப்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டத்தின் நாயகனாக வனித்து ஹசரங்கா தேர்வு செய்யப்பட்டார். இறுதிப்போட்டி ஆட்டத்தில் மிகச்சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த இலங்கை அணி 6-வது முறையாக ஆசிய கோப்பையை முத்தமிட்டது.

publive-image

இலங்கை தேசியக் கொடியை கையில் ஏந்திய கவுதம் காம்பீர்… நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்ஸ்…

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதிய இந்த இறுதிப்போட்டி ஆட்டத்தில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு மற்றும் வர்ணனை அணியில் இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இடம்பிடித்து இருந்தார். போட்டிக்கு பிறகு மைதானத்திற்குள் புகுந்திருந்த அவர், இலங்கையின் கொடியை ஏந்தி அசைத்தார். அதற்கு அங்கிருந்த இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்தினர்.

அந்த வீடியோவை இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அதற்கு கமெண்ட் செய்தும் வருகிறார்கள். அந்தப் பதிவில் கம்பீர், "சூப்பர் ஸ்டார் அணி… உண்மையிலேயே தகுதியானது!! #வாழ்த்துக்கள் ஸ்ரீலங்கா." என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது இந்த பதிவும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குப் பிறகு இலங்கையின் கொடியை பிடித்துக் கொண்டிருக்கும் கவுதம் கம்பீர் வீடியோவுக்கு ரசிகர்கள் அளித்துள்ள பதில்கள் பின்வருமாறு:

கம்பீர் பதிவிட்டுள்ள வீடியோ பதிவிற்கு ஒரு இணைய வாசி, "சர் உண்மையிலேயே தகுதியானவர் மற்றும் விதியும் கூட" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு இணைய வாசி, "போட்டியின் மூலம் நீங்கள் எப்போதும் போல் உங்கள் பார்வைகள் மற்றும் பகுப்பாய்வுகளில் சிறந்து விளங்கினீர்கள். கிரிக்கெட் பிரியர்களுக்கு நீங்கள் சொல்வதைக் கேட்பது எப்போதுமே சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னுமொரு இணையவாசியோ, "இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இலங்கைக் கொடியை அசைத்தார். பாகிஸ்தானின் தோல்வியைக் கொண்டாடும் நம் ஒவ்வொருவரும் கம்பீர்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Viral Social Media Viral Sports Cricket Asia Viral Video Viral News Gautam Gambhir Pakistan Vs Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment