Advertisment

தோனி அடித்து நொறுக்கிய அந்த ஆட்டத்தில் இவர் 'பால் பாய்'… யார் இந்த கே.எஸ் பரத்?

'பால் பாயாக' இருந்த பரத் தோனியின் ஆட்டத்தைப் பார்த்து வியந்து, தனது கிரிக்கெட் கனவை துரத்த ஆரம்பித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cricket video news in tamil: KS Bharat opens up his journey India team

IND vs AUS: KS Bharat opens up about his journey to the India team, watch video Tamil News

IND vs AUS, KS Bharat Tamil News: ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் கே.எஸ்.பரத் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அறிமுகமானார்கள். வழக்கமான கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில் விபத்தில் சிக்கிய காயங்களில் இருந்து மீண்டு வருவதால், அவருக்குப் பதிலாக கே.எஸ்.பாரத் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisment

2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 148 ரன்கள் குவித்தார். அந்த ஆட்டத்தின் போது பந்துகளை எடுத்துக்கொடுக்கும் 'பால் பாயாக' பரத் இருந்தார். தோனியின் ஆட்டத்தைப் பார்த்து வியந்து போன பரத் தனது கிரிக்கெட் கனவை துரத்த ஆரம்பித்தார்.

publive-image

கே.எஸ் பரத்

பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள கே.எஸ் பரத், "அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது… அது மிகவும் பெருமையான தருணம். நிறைய உணர்ச்சிகள் இருந்தன. உண்மையில் நான் முதல் தர கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, ​​இப்படி ஒரு நாளைப் பற்றி நான் நினைக்கவே இல்லை. எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், எனது பயிற்சியாளர் (குழந்தைப் பருவ பயிற்சியாளர் ஜே. கிருஷ்ணா ராவ்) என்னிடம் திறன் உள்ளது என்ற நம்பிக்கை வைத்தார்.

"எனது கிரிக்கெட் பயணம் ஸ்கை ராக்கெட் போல் உயர வந்தது கிடையாது. அது எப்போதும் படிப்படியாக வந்தது தான்." என்று அவர் கூறியுள்ளார்.

இந்த பேட்டியில் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பேசினார். பரத் 2018ல் இந்தியா ஏ அணியில் அறிமுகமானபோது டிராவிட் பயிற்சியாளராக இருந்தார்.

"நான் உருவாக்கியதை அவர் ஒருபோதும் மாற்ற முயற்சிக்கவில்லை. நான் செய்வதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். நான் ஆளாகவும், நான் வீரராகவும் இருக்க வேண்டும் என அவர் என்னிடம் கூறினார்." என்று பரத் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Vs Australia Sports Cricket Indian Cricket Team Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment