Advertisment

'மைதான ஊழியரை மதிக்க தெரியாத ருத்து…' வலைதளத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

A video of Ruturaj Gaikwad 'mistreating, disrespecting' groundsman goes viral in social media Tamil News: இந்திய தொடக்க வீரர் ருதுராஜ், மைதான ஊழியரை "அவமரியாதை" செய்து, தவறாக நடத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரை நெட்டிசன்கள் தாறுமாறாக வறுத்தெடுத்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Cricket viral video: Netizens frying Ruturaj for ‘mistreating, disrespecting' groundsman

Twitter was left furious over Ruturaj Gaikwad for “mistreating” and “disrespecting” a groundsman at the stadium during the fifth T20I in Bengaluru Tamil News

Cricket viral video Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

Advertisment

இந்நிலையில், தொடரை கைப்பற்ற போகும் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டி-20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய இருந்தது. ஆனால், மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி தொடங்குவதில் முதலில் சிறிய தாமதம் ஏற்பட்டது.

பின்னர் ஆட்டம் 19 ஓவர்களாக குறைபட்டு 7.50 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கிய நிலையில், முதல் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்ட இஷான் கிஷன் நிகிடி பந்துவீச்சில் 15 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் இருந்த ருதுராஜ் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்திய அணி 3.3 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி மீண்டும் தடைப்பட்டது. அப்போது களத்தில் ஷ்ரேயஸ் ஐயர் - ரிஷப் பண்ட் இருந்தனர். மழை சில நிமிடங்களிலேயே கன மழையாக பெய்ததால் ஆட்டம் முடிவின்றி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டனர். தொடர் நாயகன் விருதை ர் புவனேஷ்வர் குமார் தட்டிச் சென்றார்.

'மைதான ஊழியரை மதிக்க தெரியாத ருத்து…'

சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதலிரண்டு ஆட்டங்களில் தோல்வி கண்ட இந்திய அணி, அடுத்த நடந்த 2 ஆட்டங்களிலும் எழுச்சி பெற்று வெற்றியை ருசித்தது. இதனால் நேற்று நடக்க இருந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது என ரசிகர்கள் ஆர்வமடைந்தனர். ஆனால், போட்டி மழையின் குறுக்கிட்டால் கைவிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

மைதானத்தில் மழை சாரல் பொழிய தொடங்கிய தருணத்தில் அங்கிருந்த மைதான ஊழியர்கள் மைதானத்திற்குள் விரைவாக புகுந்து தார் பாய்களை கொண்டடு ஆடுகளத்தை மூடுவதை நம்மால் பார்க்க முடிந்தது. அவர்களின் இந்த தீவிர முயற்சி ஏனைய ரசிகர்களால் வரவேற்பட்டது.

ஆனால், இளம் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மைதான ஊழியர் ஒருவரை "அவமரியாதை" செய்து, "தவறாக நடத்தி" இருக்கிறார். அது வீடியோவாக பதிவிடப்பட்டு சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், அதைப்பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் ருதுராஜை வறுத்தெடுத்து வருகின்றனர்.

அந்த வீடியோவில், டக்அவுட்டில் அமர்ந்து இருக்கும் ருதுராஜ் அருகில் மைதான ஊழியர் ஒருவர் அமர்ந்துள்ளார். அவர் ருதுராஜிடம் செல்ஃபி என்று கேட்கிறார். ருதுராஜ் செல்ஃபிக்கு மறுப்பு தெரிவிக்கிறார். மேலும் அந்த ஊழியரிடம் இடைவெளி விட்டு அமர வேண்டும் என்று கூறி விட்டு முகத்தை எதிர்புறமாக திருப்புகிறார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு இணைய பக்கங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ருதுராஜ் கெய்க்வாட்டை திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், அவருக்கும் மூத்த வீரர்கள் எப்படி மைதான ஊழியர்களிடம் நடந்து கொண்டார்கள் என்பதற்கான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Viral Social Media Viral Sports Cricket Viral Video Viral News Ruturaj Gaikwad India Vs South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment