Advertisment

சிஎஸ்கே அணியில் ஆடப் போகும் அந்த 11 வீரர்கள் யார்? இதோ லிஸ்ட்!

தோனிக்கு பிறகு மேட்ச் வின்னிங் வீரராக அணியில் இருப்பவர், இருக்க வேண்டியவர் பிராவோ. அது தான் அணிக்கு நல்லது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிஎஸ்கே அணியில் ஆடப் போகும் அந்த 11 வீரர்கள் யார்? இதோ லிஸ்ட்!

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் சிஎஸ்கே...

Advertisment

மீண்டும் தோனி கேப்டனாக...

பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக...

அதுவும் மும்பை மண்ணில்...

தோனி vs ரோஹித்...

Yellow ஆர்மி vs Blue ஆர்மி

இப்படி பல மேஜிக்கல் மொமண்ட்ஸ் கொண்ட 11வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மோதுகின்றன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும்.

அதுவும், சென்னை அணிக்கு இது உணர்வுப்பூர்வமான தருணம் இது. 'நீ காசு வாங்கிட்டு தான் இவ்வளவு நாள் ஜெயிச்சியா?' -னு கேட்ட ஆயிரமாயிரம் கேள்விகளைக் கடந்து, இரண்டு ஆண்டுகள் களத்தில் கால் பட தடை பெற்று, இன்று அந்த தடையை முழுவதும் அனுபவித்து மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளது சிஎஸ்கே.

ஆனால், இப்போது மீண்டும் 'நீ காசு வாங்கினதால் தான் இவ்வளவு நாள் ஜெயிச்சிருக்க' என்ற வார்த்தையை உதிர காத்திருக்கும் வாய்களுக்கு பூட்டு போட வேண்டிய கட்டாயமும், 'தோனி அவ்ளோதான் பா' என்று கூச்சலிட ஆர்வமாக காத்திருக்கும் மனங்களுக்கு அணை கட்ட வேண்டிய கட்டாயமும் சிஎஸ்கே அணிக்கு உள்ளது. கொஞ்சம் அசந்தாலும் அசச்சிடுவாங்க!. இப்படி பல நெருக்கடிகளை சமாளித்து, நின்று, விளாசி, அதே பழைய கெத்தோடு ஜெயிக்க வேண்டிய கடமையும் சிஎஸ்கே அணிக்கு உள்ளது. குறிப்பாக, தோனிக்கு!.

பல உணர்வுப்பூர்வமான பாரத்தை மனதில் சுமந்து கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் மைதானத்தில் காலடி எடுத்து வைக்கும் சென்னை அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெற அதிகம் வாய்ப்புள்ளது என்பதை இங்கே பார்ப்போம்.

முரளி விஜய்,

ஷேன் வாட்சன்,

சுரேஷ் ரெய்னா,

மகேந்திர சிங் தோனி,

கேதர் ஜாதவ்,

டுவைன் பிராவோ,

ரவீந்திர ஜடேஜா,

ஹர்பஜன் சிங்,

இம்ரான் தாஹிர்,

ஷர்துள் தாகுர்,

மார்க் வுட்.

இவர்கள் 11 பேரும் இன்று அணியில் இடம்பெற அதிகம் வாய்ப்புள்ளது.

#டாப் ஆர்டர் 

இதற்கு முன்னதாக சென்னை அணியில் விளையாடிய போது, முரளி விஜய் தொடக்க வீரராக தான் களமிறங்கினார். கொஞ்சம் ஸ்லோவாக தான் இன்னிங்ஸ் தொடங்குவார். ஷேன் வாட்சன் மெகா அதிரடி வீரர். தொடக்க வீரரும் கூட. ஸோ, இவர்கள் இருவரும் சிஎஸ்கே-வின் ஒப்பனர்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

#மிடில் ஆர்டர் 

ரெய்னா, தோனி மற்றும் 7.8 கோடிக்கு பெங்களூரு அணியில் இருந்து வாங்கப்பட்டுள்ள கேதர் ஜாதவ் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கிறார்கள்.

#லோ ஆர்டர்

டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா லோ ஆர்டரை நிரப்புவார்கள் என நம்பலாம். தோனிக்கு பிறகு மேட்ச் வின்னிங் வீரராக அணியில் இருப்பவர், இருக்க வேண்டியவர் பிராவோ. அது தான் அணிக்கு நல்லது.

#பவுலர்கள்

ஹர்பஜன் சிங், இமரான் தாகிர், ஷர்துள் தாகுர், மார்க் வுட்.

ஹர்பஜன் சிங் - வலது கை ஆஃப் பிரேக் ஸ்பின்னர்.

இம்ரான் தாஹிர் - வலது கை லெக் பிரேக் ஸ்பின்னர்.

இது தவிர, இடது கை ஸ்பின்னராக ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். தேவைப்பட்டால், வலது கை ஆஃப் பிரேக் பவுலராக கேதர் ஜாதவ் செயல்படுவார்.

ஆக, இது தான் பக்கா ஸ்பின் அட்டாக்காக இருக்க முடியும்.

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை, ஷர்துள் தாக்குர், மார்க் வுட் ஆகியோர் பிரதான பவுலர்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. தவிர, ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ ஆகியோரும் வேகப்பந்துவீச்சில் தோனிக்கு கைக்கொடுக்க காத்திருக்கின்றனர்.

ஸோ, நாம் மேலே குறிப்பிட்டுள்ள சிஎஸ்கே அணி இன்று களம் காண அதிகமாக வாய்ப்புள்ளது.

அதேசமயம், மும்பை அணியிடம் சென்னை பேட்ஸ்மேன்கள் படு உஷாராக இருக்க வேண்டும். அங்கே வேகப்பந்து வீச்சாளர்கள் யார் யார் தெரியுமா?

ஜஸ்ப்ரித் பும்ரா, முஸ்தாபிசூர் ரஹ்மான், பேட் கம்மின்ஸ்.

பும்ராவும், முஸ்தாபிசூரும் டெத் ஓவர்கள் மிக மிக டேஞ்சரானவர்கள். இன்னும் சொல்லப் போனால், இன்றைய சூழலில், குறுகிய ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளின் டெத் ஓவர்கள் வீசுவதில் இவர்கள் இருவரும் தான் மிகச் சிறந்த வீரர்களாக உள்ளனர்.

கொஞ்சம் விலகி பேட்டிங் செய்தால், ஸ்டம்ப்பை காலி செய்துவிடுவார்கள். யார்க்கர் புலிகள். கேதர் ஜாதவும், பிராவோவும் மிக மிக கவனமாக இவர்களது ஓவரை எதிர் கொள்ள வேண்டும்.

இவர்கள் இருவரையும் ஓரளவிற்கு சமாளித்துவிட்டால், நிச்சயம் வெற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அப்புறம் தல தோனியிடம் சில வேண்டுகோள்:

ரோஹித்தை ஆரம்பத்துலயே காலி பண்ணிடுங்க!. அது உங்களுக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் சொல்றேன்.

முரளி விஜய்... நல்ல பிளேயர் தான். களத்தில் நின்றுவிட்டால், நின்று கொண்டே ஸ்டைலாக சிக்ஸர்கள் விளாசுவதில் மன்னன் தான். ஆனால், 'பழைய குருடி, கதவ தொறடி' கதையாக நான் லீக் மேட்ச்சுல-லாம் அடிக்க மாட்டேன்... நேரா செமி பைனல், பைனல்-ல தான் அடிப்பேன்-னு உட்கார்ந்திட போறார்!. கொஞ்சம் கவனிங்க தல.

அப்புறம், பேட்டிங்குல ஜடேஜாவை பெருசா நம்பிடாதீங்க தல!. நல்ல பிளேயர் தான். ஆனால், முரட்டுத்தனமா இன்னும் அவர் சிக்சர் அடிக்க கத்துக்கல.. பவுலிங் அன்ட் பீல்டிங்கிற்கு தான் அவர் சரிப்பட்டு வருவார்-னு உங்களுக்கே தெரியும்.

கடைசி ஒன்னே ஒன்னு. முடிந்த அளவு, கேதர் ஜாதவை உங்களுக்கு முன்னால் இறக்கிவிடுங்க தல. ஏன்னா, நம்ம கோச் ஸ்டீபன் பிளமிங் ரீசண்ட்டா அளித்த பேட்டியில, 'தோனி ஒரு பேட்ஸ்மேனாகவும் முக்கிய பங்கு வகிப்பார்-னு சொல்லி இருக்காப்ல. நல்லது தான். சந்தோஷம். ஆனா, நீங்க 50 ரன்கள் அடிச்சு சீக்கிரம் அவுட்டாகி போறதை விட, லாஸ்ட் ஓவர்-ல மேட்ச்சை ஜெயிச்சு கொடுத்து, கடைசி வரை நாட் அவுட்டாகி நிற்பதைத் தான் நாங்கள் ரசிக்கிறோம்  தல.

ஸோ, எங்களுக்கு பேட்ஸ்மேன் தோனி வேண்டாம்.... பினிஷர் தோனி தான் வேண்டும் என்பதை தெரிஞ்சிகோங்க தல!.

 

Ipl 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment