Advertisment

சிக்கலில் இலங்கை வீரர்... சிஎஸ்கே அணிக்கு எதிராக கொடி பிடிக்கும் நெட்டிசன்கள்!

Fans are posting messages on Twitter with the hashtag Boycott Chennai Super Kings a day after the IPL mega auctions Tamil News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷனாவை ரூ.70 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது, தற்போது தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
CSK news in tamil: why fans are trending boycott Chennai Super Kings in Twitter

CSK news in tamil: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் தங்களிடம் இருந்த இருப்புத்தொகைக்கு ஏற்ப கணக்கு போட்டு வீரர்களை ஏலத்தில் ஆர்வமுடன் எடுத்தனர். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த தேர்வுக் குழுவும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் வாங்கியது.

Advertisment

ரெய்னா ரசிகர்கள் ஏமாற்றம்

இந்த மெகா ஏலத்தில் ஐபிஎல் அணிகள் இளம் வீரர்களை வாங்க ஆர்வம் காட்டி வந்த நிலையில், முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா எந்த அணியாலும் வாங்கப்படாமல் போனார். அவர் தனது அடிப்படை விலை ரூ. 2 கோடி என குறிப்பிட்டு இருந்தும், அவர் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக, அவர் 12 ஆண்டுகளாக விளையாடிய சிஎஸ்கே அணி எந்த வித பாவனையும் காட்டவில்லை.

publive-image

ஐபிஎல் ஏல வரலாற்றில் ரெய்னா விற்கப்படாமல் போனார் என்பது இதுதான் முதல்முறை ஆகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா, ஐபிஎல்லில் அதிக ரன்கள் (5,528 ரன்கள்) எடுத்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். அவருக்கு முன்னால் விராட் கோலி, ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய வீரர்கள் உள்ளனர்.

சென்னை ரசிகர்களால் "சின்ன தல" என அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் சிஎஸ்கே அணி கழட்டிவிட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக, அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே கிட்டியது.

publive-image

ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 176 போட்டிகளில் விளையாடி 4687 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் அடித்த ஒரு சதம் மற்றும் 33 அரைசதங்களும் உள்ளடங்கும்.

சிக்கலில் சிக்கிய இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷனா

சென்னை அணி மெகா ஏலத்தில் இளம் வீரர்களை நோக்கி கவனத்தை திருப்பிய நிலையில், இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷனாவை ரூ.70 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இது தற்போது தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

publive-image

கடந்த 2013-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாட தடை விதிக்க வேண்டும் என அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்க்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடித்ததில் அவர், இலங்கை விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி நடுவர்கள், அதிகாரிகள், சப்போர்ட்டிங் ஸ்டாஃப் என இலங்கையை சேர்ந்த யாரும் பங்கேற்க மாட்டார்கள் என ஐபிஎல் நிர்வாகம் உறுதியளித்தால் மட்டுமே சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இலங்கை அணிக்காக விளையாடி வரும் மகேஷ் தீக்ஷனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது தமிழக ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர்கள் அந்த அணிக்கெதிராக சமூக வலைதளங்களில் #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். மேலும், இது குறித்து அவர்கள் தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

publive-image

பாகிஸ்தான் மட்டும் இந்தியாவுக்கு எதிரியல்ல. இலங்கை தமிழர்களை வஞ்சித்த, தமிழக மீனவர்களை தினந்தோறும் துன்புறுத்தும் இலங்கையும் இந்தியாவுக்கு எதிரிதான். பாகிஸ்தான் வீரர்களை நாடு விரும்பவில்லை என்பது போல் இலங்கை வீரர்களை தமிழர்கள் விரும்பவில்லை என பலரும் ட்விட்டரில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ள மகேஷ் தீக்ஷனா இலங்கை ராணுவம் அணிக்காக விளையாடியவர். உடனடியாக இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையீட்டு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என சிலர் ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2018ம் ஆண்டு நடந்த காவிரி விவகாரத்தின் போது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகள் சில அரசியல் அமைப்புகளின் குறுக்கீட்டால் தடைபட்டும், தள்ளி வைக்கப்பட்டும் போனது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அந்த அரசியல் அமைப்புகள் 'சோறு முக்கியமா? ஸ்கோரு முக்கியமா? என்று கேட்டதோடு, மைதானத்திற்குள் நுழைய இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தி இருந்தனர்.

இலங்கை தமிழர் பிரச்சனை உச்சத்தில் இருந்த போது, சென்னை அணியில் விளையாடிய இலங்கையின் ஜாம்பாவான் வீரர் முத்தையா முரளிதரன் அணியில் விளையாட கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இவ்வளவுக்கும் முத்தையா முரளிதரன் இலங்கை தமிழர் ஸ்டார் அந்தஸ்து உள்ள கிரிக்கெட் வீரர் ஆவார்.

ஐ.பி.எல். 2022ம் ஆண்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் முழு அணி வீரர்கள் பட்டியல்:

எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயாடு, டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, தீபக் சாஹர், கேஎம் ஆசிப், ஷிவம் துபே, மகேஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிமர்ஜீத் சிங், டிவோன் கான்டோரியஸ், டிவோன் கான்வேரிஸ் , மிட்ச் சான்ட்னர், ஆடம் மில்னே, சுப்ரான்ஷு சேனாபதி, பிரசாந்த் சோலங்கி, முகேஷ் சவுத்ரி, சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Super Kings Sports Cricket Ipl Cricket Ipl News Csk Ipl Auction Ipl 2022 Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment