ஐபிஎல்: சென்னையில் நாளை டிக்கெட் விற்பனை தொடக்கம்

11வது ஐ.பி.எல் தொடருக்கான டிக்கெட் விற்பனை சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது

11வது ஐ.பி.எல் தொடருக்கான டிக்கெட் விற்பனை சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

11வது ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இதில், முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. ஏப்ரல் 7ம் தேதி ஆரம்பிக்கும் இந்த ஐபிஎல் திருவிழா, மே மாதம் 27ம் தேதியன்று நிறைவு பெறுகிறது. இறுதிப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்திலேயே நடைபெற உள்ளது.

லீக் போட்டிகள் மே 20ம் தேதியோடு முடிவடைகிறது. மே 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டி 4 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு மீண்டும் தற்போது களமிறங்குவதால், இரு அணி ரசிகர்களும், பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

இந்நிலையில், டிக்கெட் விற்பனை சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

சேப்பாக்கத்தில் 10-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும்.

ஒருவருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் கொடுக்கப்படமாட்டாது. டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ.1,300. மேலும் ரூ.2,500, 4,500 ரூ.5,000, ரூ.6,500 ஆகிய விலைகளிலும் டிக்கெட் கிடைக்கும். ஆன்லைன் மூலமும் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். www.chennaisuperkings.com, www.bookmyshow.com ஆகிய இணையதளங்களில் டிக்கெட் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close