Advertisment

பந்தை பறந்துப் பிடித்த தோனி: சேஸிங்கை சொதப்பிய ஜாதவ்

இறுதியாக களமிறங்கிய கேதர் ஜாதவ் பயங்கரமாக சொதப்பி, ரசிகர்களின் பொறுமையை சோதித்தார்.

author-image
WebDesk
New Update
CSK VS KKR MS Dhoni, Kedar Jadhav

CSK VS KKR MS Dhoni, Kedar Jadhav

IPL 2020: ஐபிஎல் தொடரின் 21-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Advertisment

இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக பந்துவீசி கொல்கத்தா அணியை ஆல் - அவுட் செய்தது. கொல்கத்தா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிராவோ 3, சாம் கர்ரன் 2, ஷர்துல் தாக்குர் 2, கரன் சர்மா 2 என்ற எண்ணிக்கைகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், சென்னை அணியில் சுழற் பந்துவீச்சாளர் பியுஷ் சாவ்லா நீக்கப்பட்டு, அவருக்கு பதில் கரன் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். கடந்த போட்டிகளில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்ததன் காரணமாக சாவ்லா நீக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

Flipkart Offers: சாம்சங், எல்.ஜி… நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக ராகுல் திரிபாதி - ஷுப்மன் கில் களமிறங்கினர். 11 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் கில். அடுத்து வந்த நிதிஷ் ராணா 9 ரன்களில் கரண் சர்மாவிடம் வீழ்ந்தார். அடுத்து சுனில் நரைன் 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். அவரை ஜடேஜா - பாப் டுபிளெசிஸ் இணைந்து அசத்தல் கேட்ச் பிடித்து வெளியேற்றினர். பின்னர் களமிறங்கிய இயான் மார்கன் 7 ரன்கள் எடுத்து சாம் கர்ரனிடமும், ஆண்ட்ரே ரஸ்ஸல் 2 ரன்கள் எடுத்து ஷர்துல் தாக்குரிடமும் வீழ்ந்தனர்.

ராகுல் திரிபாதி தனி ஆளாக 17-வது ஓவர் வரை போராடினார். 81 ரன்கள் எடுத்து அவரும் பிராவோவிடம் வீழ்ந்தார். அடுத்து தினேஷ் கார்த்திக் 12 ரன்கள் எடுத்து கர்ரன் ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் நாகர்கோட்டி, சிவம் மாவி பிராவோ பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்கள். இதனால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா அணி, 167 ரன்கள் எடுத்தது. குறைந்தபட்சம் அந்த அணி 190-க்கு மேல் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சிஎஸ்கே-வின் பந்து வீச்சாளர்கள் மிகவும் திறமையாக விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கையால் பந்தை தட்டிவிட்டு மீண்டும் அதைப் பறந்து பிடித்து கீழே விழுந்து எழுந்த தோனி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ’ஏஜ் இஸ் ஜஸ்ட் எ நம்பர்’ என்பது அந்த இடத்தில் இன்னும் தெளிவாக விளங்கியது.

பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் - ஃபாஃப் டுபிளெசிஸ் அதிரடி ஆட்டம் ஆடினர். டுபிளெசிஸ் 10 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ராயுடு - வாட்சன் பார்ட்னர்ஷிப்பில் 69 ரன்கள் குவித்தனர். ராயுடு ஆட்டமிழந்ததும் களமிறங்கினார் கேப்டன் தோனி. ஆனால் 12 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து அவரும் அவுட் ஆனார். அப்போதும் ஜாதவ் களமிறங்காமல் அவருக்கு பதில் சாம் கர்ரன் களமிறங்கினார்.

2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

இறுதியாக களமிறங்கிய கேதர் ஜாதவ் பயங்கரமாக சொதப்பி, ரசிகர்களின் பொறுமையை சோதித்தார். கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் மூன்று பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தார் ஜாதவ். ஜடேஜா கடைசி 3 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தும் அது பயனில்லாமல் போனது. இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சி.எஸ்.கே-வின் பேட்டிங் ஆர்டரும் இந்த தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் தவறை திருத்திக் கொண்டு, சிஎஸ்கே பழைய பன்னீர் செல்வமாக திரும்பி வர வேண்டும் என்பதே, ரசிகர்களின் தீரா வேண்டுதலாக உள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Csk Dhoni Kkr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment