உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடக்கும் மைதானம் குறித்தும், தட்பவெட்ப நிலை குறித்தும் ஒரு சிறிய அலசல் இதோ,
இந்தியா vs தென்னாப்பிரிக்கா (ஜூன் 5), இந்திய vs ஆப்கானிஸ்தான் (ஜூன் 22)
ஜூன் 5ம் தேதி, ஆட்டம் நடைபெறும் நாள் முழுவதும் வெயில் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18-20 டிகிரி செல்சியல் வெப்பநிலை நிலவும். ஆனால், ஜூன் 22ம் நடக்கும் போட்டியன்று லேசான சாரல் மழை பொழியலாம்.
பொதுவாக சவுத்தாம்ப்டன் பிட்ச் வறண்டு காணப்படும். இதனால், இங்கு கடைசி ஓரிரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அதிகளவு ரன்கள் குவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், இந்த வறண்ட பிட்ச் தன்மை, ஸ்பின்னர்கள் பந்தை க்ரிப்பாக பிடித்து வீசவும் உதவும் என்பதால், அவர்களுக்கும் இதில் சாதகம் உள்ளது.
ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் – 262, ஆவரேஜ் இரண்டாம் இன்னிங்ஸ் ஸ்கோர் – 213
இந்தியா vs ஆஸ்திரேலியா (ஜூன் 9)
ஜூன் 9ம் தேதி நடக்கும் இப்போட்டியில் குளிர் வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 17-19 டிகிரி செல்சியல் வெப்பநிலை இருக்கும். காலையில் லேசான மழை பெய்யலாம். ஆனால், பிற்பகுதியில் ஓரளவுக்கு சூரியன் எட்டிப் பார்க்கும்.
பேட்டிங் செய்வதற்கு கென்னிங்டன் ஓவல் பிட்ச் கடினமான ஒன்றாகும். புற்கள் நிறைந்து காணப்படும் இந்த பிட்சுடன் குளிர் வானிலையும் சேர்ந்து வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே மைதானத்தில் நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்தியா சரிந்ததே இதற்கு சரியான உதாரணம்
ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் – 247, ஆவரேஜ் இரண்டாம் இன்னிங்ஸ் ஸ்கோர் – 213
இந்தியா vs நியூசிலாந்து (ஜூன், 13)
நாட்டிங்கம் வானிலை போட்டி நடக்கும் தினத்தன்று அதிக குளிரை உமிழ்ந்து கொண்டிருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 20 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் லேசான காற்றும் வீசும்.
ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தின் பிட்ச், சமீப காலங்களில் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக விளங்குகிறது. இதே விக்கெட்டில் இங்கிலாந்து இருமுறை 400 ரன்களை கடந்து மிரட்டியிருக்கிறது. குறுகிய எல்லைகள், பந்துவீச்சாளர்களுக்கு சோதனையாக அமையலாம்.
இருப்பினும், 13ம் தேதி நிலவும் மேகமூட்டம் காரணமாக, வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையலாம்.
ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் – 252, ஆவரேஜ் இரண்டாம் இன்னிங்ஸ் ஸ்கோர் – 219.
இந்தியா vs பாகிஸ்தான் (ஜூன் 16), இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் (ஜூன் 27)
இது தான் மெகா மேட்ச்… ஜூன் 16ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் மோதும் நாளன்று காலை, மதியம் லேசான மழை இருக்கும். 15 டிகிரி செல்சியல் அளவுக்கு வெப்பநிலை இருக்கும். குளிர் வானிலை நிலவும்.
27ம் தேதி நடக்கும் போட்டியன்றும் இதே வானிலை நிலவும்.
பொதுவாக ஸ்பின்னர்களுக்கு ஒத்துழைக்கும் இந்த பிட்ச் நிறைய நகம் கடிக்கும் த்ரில் ஆட்டங்களை வழங்கியுள்ளது. குறைந்த ஸ்கோர் ஆட்டங்களாக அமையும். மேக மூட்ட வானிலையின் போது, வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இது ஒத்துழைக்கும்.
ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் – 214, ஆவரேஜ் இரண்டாம் இன்னிங்ஸ் ஸ்கோர் – 192.
இந்தியா vs இங்கிலாந்து (ஜூன் 30), இந்தியா vs வங்கதேசம் (ஜூலை 2)
விளையாடுவதற்கான ஏற்ற அபாரமான வானிலை இங்கு நிலவும். இரண்டு போட்டிகளின் போதும் நல்ல வெயில் நிலவும். பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் ஏற்ற பிட்சாக அமையும். அதேசமயம், ஸ்பின்னர்களுக்கும் உதவலாம்.
ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் – 227, ஆவரேஜ் இரண்டாம் இன்னிங்ஸ் ஸ்கோர் – 179.
இந்தியா vs இலங்கை (ஜூலை 6)
20 டிகிரி செல்சியல் வெப்பநிலை நிலவும். கிரிக்கெட் விளையாடுவதற்கான அருமான வானிலை நிலவும். இரு அணிகள் சார்பாக நிறைய ரன்கள் அறுவடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் – 226, ஆவரேஜ் இரண்டாம் இன்னிங்ஸ் ஸ்கோர் – 207.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Cwc 2019 analysing the 6 venues india will play at world cup
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா : மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்
செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு பாடங்களில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் : டிஆர்டிஓ அறிவிப்பு
‘நாங்கள் ஆச்சரியப்படவில்லை, அவருடைய திறனைப் பற்றி அறிந்திருந்தோம் : வாஷிங்டன் சுந்தரின் தந்தை