Advertisment

புரோ கபடியில் தமிழ் தலைவாஸ் மோசமான தோல்வி: அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறி

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள் விளையாட்டு அரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, தபாங் டெல்லி கே.சி. அணியை எதிர்கொள்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dabang Delhi KC vs Tamil Thalaivas, PKL 2019 today match When and where to watch LIVE - புதிய கோச்... புதிய களம்... புதிய வெற்றியை பதிவு செய்யுமா தமிழ் தலைவாஸ்?

Dabang Delhi KC vs Tamil Thalaivas, PKL 2019 today match When and where to watch LIVE - புதிய கோச்... புதிய களம்... புதிய வெற்றியை பதிவு செய்யுமா தமிழ் தலைவாஸ்?

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற தபாங் டெல்லி கே.சி. அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் 50 - 34 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.

Advertisment

2019 புரோ கபடி லீக் தொடரில் இதுவரை மோதிய 13 ஆட்டங்களில் 3ல் மட்டுமமே வென்று, 27 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி. தொடர்ந்து ஆறு தோல்விகளால் துவண்டு போயிருக்கிறது.

இந்த சீசனில், இதுவரை தமிழ் தலைவாஸ் மொத்தமாக 536 ரெய்டுகள் சென்றுள்ளது. அதில் 167ல் மட்டுமே வெற்றிகரமாக புள்ளிகள் கிடைத்துள்ளது. வெற்றிகரமான ரெய்டு சதவிகிதம் 39% மட்டுமே.அதேபோல், இந்த சீசனின் 273 டேக்கிளில் 157 டேக்கிளை தமிழ் தலைவாஸ் தவற விட்டிருக்கிறது. இதனால், தொடர் தோல்விகளை தவிர்க்க முடியவில்லை.

மேலும் படிக்க - ஷெராவத் இருந்தால் எந்த மார்ஷலுக்கும் வேலை இல்லை: கலக்கும் கபடி புயல்

இதையடுத்து தமிழ் தலைவாஸின் பயிற்சியாளராக இருந்த எடச்சேரி பாஸ்கரன் பதவி விலகினார். இவருக்குப் பதில் 2002, 2006 மற்றும் 2014 ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று தந்த இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் உதய்குமார் தமிழ் தலைவாஸ் அணியின் இடைக்கால பயிற்சியாளராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள் விளையாட்டு அரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, தபாங் டெல்லி கே.சி. அணியை எதிர்கொண்டது. இதில், 50 - 34 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லி அணி வெற்றிப் பெற்றுள்ளது.

தமிழ் தலைவாஸ் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சௌத்ரி 14 புள்ளிகளும், அஜித்குமார் 9 புள்ளிகளும் எடுத்தனர்.

தமிழ் தலைவாஸ் அணி இன்னும் 8 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதில் 7ல் வெற்றி பெறும் பட்சத்தில் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Thalaivas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment