Advertisment

IPL 2021: டெல்லிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி; இறுதிப் போட்டிக்கு தகுதி

CSK faces DC in IPL Quaifier 1, live score, live updates and match highlights Tamil News: முதலாவது குவாலிஃபைர் சுற்றில் டெல்லி அணியை வீழ்த்திய சென்னை அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DC VS CSK live match tamil: IPL 2021 Qualifier 1, DC vs CSK Live Score and match Highlights tamil

IPL 2021 Qualifier 1, DC VS CSK match highlights Tamil News: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடந்த முதலாவது குவாலிஃபைர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். எனவே முதலில் பேட்டிங் செய்ய டெல்லி கேபிட்டல்ஸ் அணி களம் கண்டது.

Advertisment

தொடக்க ஆட்டக்காரர்களில் ரன் சேர்க்க தடுமாறிய ஷிகர் தவான் 7 ரன்னில் அவுட் ஆன நிலையில், மறுமுனையில் இருந்த பிருத்வி ஷா அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். இதனால் டெல்லி அணி பவர் பிளே முடிவில் டெல்லி 2 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்தது.

எனினும் அவருடன் மறுமுனையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஸர் பட்டேல் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதை பொருட்படுத்தாமல் தனது அதிரடியை தொடர்ந்த பிருத்வி ஷா 27 பந்துகளில் தனது அரைசத்தை பதிவு செய்தார். 34 பந்துகளில் 3 சிக்ஸர் 7 பவுண்டரிகளை விளாசி 60 ரன்கள் சேர்ந்திருந்த அவர் ஜடேஜாவின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.

டெல்லி அணி அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த நிலையில் களத்தில் இருந்த கேப்டன் ரிஷப் பண்ட் - சிம்ரான் ஹெட்மியர் ஜோடி விக்கெட் சரிவை நீண்ட நேரம் தடுத்து நிறுத்தியது. இந்த ஜோடியில் 24 பந்தில் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகளை விரட்டி 37 ரன்கள் சேர்த்த சிம்ரான் ஹெட்மியர் பிராவோ வீசிய 18.4வது ஓவரில் ஜடேஜா வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

களத்தில் இறுதிவரை ஆடிய கேப்டன் பண்ட் தனது அரைசத்தை (35 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள்) பதிவு செய்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் சேர்த்தது.

சென்னை அணி சார்பில் துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, மொயீன் அலி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 173 ரன்கள் கொண்ட இலக்கை சென்னை அணி துரத்திய சென்னை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து இருந்தாலும் தொடர்ந்து வந்த ராபின் உத்தப்பா மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவருடன் கைகொடுத்து ஆடிய ருதுராஜ் கெய்க்வாட்டும் மறுமுனையில் அதிரடி காட்டினார்.

இந்த ஜோடியில் 63 ரன்கள் (44 பந்தில், 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உட்பட) சேர்த்த ராபின் உத்தப்பா டாம் கரண் வீசிய 13.3 ஓவரில் ஷ்ரேயஸ் ஐயர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அம்பதி ராயுடு (1), ஷர்துல் தாக்கூர்(0) சொற்ப ரன்னில் வெளியேறினர். எனினும் தனது அதிரடியை தொடர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்தார். அவர் 70 ரன்கள் (50 பந்தில், 2 சிக்ஸர், 5 பவுண்டரிகள் உட்பட) சேர்த்த நிலையில் ஆவேஷ் கான் வீசிய 18.1 ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

2 பவுண்டரிகளை விரட்டிய மொயீன் அலி 16 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். தொடர்ந்து வந்த கேப்டன் தோனி 6 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளை பறக்கவிட்டு தனது பாணியில் ஆட்டத்தை முடித்து வைத்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 173 ரன்கள் கொண்ட இலக்கை சென்னை அணி 20 ஓவர்களில் 2 பந்துகள் மீதம் இருக்க 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த மிரட்டலான வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தோல்வியை தழுவியுள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணி நாளை நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியை நாளை மறுநாள் நடக்கும் 2வது குவாலிஃபைர் சுற்றில் எதிர்கொள்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 00:07 (IST) 11 Oct 2021
    டெல்லியை வீழ்த்திய சென்னை; 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது!

    டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 173 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வந்த சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.



  • 00:06 (IST) 11 Oct 2021
    டெல்லியை வீழ்த்திய சென்னை; 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது!

    டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 173 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வந்த சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.



  • 23:06 (IST) 10 Oct 2021
    ருதுராஜ் கெய்க்வாட் அவுட்!

    டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 173 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் சென்னை அணிக்கு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 70 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.



  • 23:04 (IST) 10 Oct 2021
    சென்னை அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 24 ரன்கள் தேவை!

    டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 173 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்துள்ளது.

    சென்னை அணி வெற்றி பெற, 12 பந்துகளுக்கு 24 ரன்கள் தேவை



  • 22:51 (IST) 10 Oct 2021
    15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி!

    டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 173 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை சேர்த்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 52 ரன்கள் தேவை.



  • 22:43 (IST) 10 Oct 2021
    உத்தப்பா அவுட்!

    டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 173 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் சென்னை அணிக்கு அதிரடியாக விளையாடி 63 ரன்கள் சேர்த்த ராபின் உத்தப்பா டாம் கரண் வீசிய 13.3 ஓவரில் ஷ்ரேயஸ் ஐயர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



  • 22:43 (IST) 10 Oct 2021
    ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்!

    சென்னை அணிக்காக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் அரைசத்தை பதிவு செய்துள்ளார்.



  • 22:36 (IST) 10 Oct 2021
    ருதுராஜ் கெய்க்வாட் - ராபின் உத்தப்பா ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்!

    டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 173 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் சென்னை அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட் - ராபின் உத்தப்பா ஜோடி அதன் 100 ரன்கள் பாட்னர்ஷிப் கடந்தது.



  • 22:19 (IST) 10 Oct 2021
    உத்தப்பா அரைசதம்!

    ஃபாஃப் டு பிளெசிஸ் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய ராபின் உத்தப்பா அதிரடி காட்டி 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.



  • 22:16 (IST) 10 Oct 2021
    10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி!

    டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 173 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் சென்னை அணி முடிவில் 1 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை சேர்த்துள்ளது



  • 22:04 (IST) 10 Oct 2021
    பவர் பிளே முடிவில் சென்னை அணி!

    டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 173 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் சென்னை அணி பவர் பிளே முடிவில் விக்கெட்டுகளை இழந்து ரன்களை சேர்த்துள்ளது.



  • 21:46 (IST) 10 Oct 2021
    களத்தில் சென்னை அணி!

    முதலாவது தகுதி சுற்றில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் சேர்த்துள்ள நிலையில், 173 ரன்கள் கொண்ட இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது.

    தொடக்க ஆட்டக்காரர்களில் சரியான துவக்கம் கிடைக்காத ஃபாஃப் டு பிளெசிஸ் அன்ரிச் நார்ட்ஜே வேகத்தில் சிக்கி 1 ரன்னுடன் ஆட்டமிழந்தார்.



  • 21:19 (IST) 10 Oct 2021
    சிம்ரான் ஹெட்மியர் அவுட்; 550 -வது டி20விக்கெட்டை கைப்பற்றிய பிராவோ!

    டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணியில் நீண்ட நேரம் களத்தில் இருந்து நிதான ஆட்டத்தை தொடர்ந்திருந்த சிம்ரான் ஹெட்மியர், 37 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.

    சிம்ரான் ஹெட்மியர் விக்கெட்டை வீழ்த்திய பிராவோ தனது 550 -வது டி20விக்கெட்டை கைப்பற்றினார்.



  • 21:18 (IST) 10 Oct 2021
    டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

    டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் பிருத்வி ஷா 60 ரன்களும், கேப்டன் ரிஷப் பண்ட 51 ரன்களும் சேர்த்தனர். இதனால் சென்னை அணிக்கு ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



  • 21:10 (IST) 10 Oct 2021
    ரிஷப் பண்ட் அவுட்; 550 -வது டி20விக்கெட்டை கைப்பற்றிய பிராவோ!

    டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணியில் நீண்ட நேரம் களத்தில் இருந்து நிதான ஆட்டத்தை தொடர்ந்திருந்த கேப்டன் ரிஷப் பண்ட் 37 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.

    ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்திய பிராவோ தனது 550 -வது டி20விக்கெட்டை கைப்பற்றினார்.



  • 21:10 (IST) 10 Oct 2021
    சிம்ரான் ஹெட்மியர் அவுட்; 550 -வது டி20விக்கெட்டை கைப்பற்றிய பிராவோ!

    டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணியில் நீண்ட நேரம் களத்தில் இருந்து நிதான ஆட்டத்தை தொடர்ந்திருந்த சிம்ரான் ஹெட்மியர், 37 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.

    சிம்ரான் ஹெட்மியர் விக்கெட்டை வீழ்த்திய பிராவோ தனது 550 -வது டி20விக்கெட்டை கைப்பற்றினார்.



  • 20:56 (IST) 10 Oct 2021
    15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி!

    டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களை சேர்த்துள்ளது.



  • 20:23 (IST) 10 Oct 2021
    பிருத்வி ஷா அவுட்!

    சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த தொடக்க வீரர் பிருத்வி ஷா 62 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.



  • 20:21 (IST) 10 Oct 2021
    10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி!

    டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்களை சேர்த்துள்ளது.



  • 20:16 (IST) 10 Oct 2021
    அக்ஸர் பட்டேல் அவுட்!

    சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டுக்கு பின் வந்த அக்ஸர் பட்டேல் 10 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.



  • 20:12 (IST) 10 Oct 2021
    அரைசதம் கடந்தார் பிருத்வி ஷா!

    சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணியில் அதிரடியாக விளையாடி வரும் தொடக்க வீரர் பிருத்வி ஷா 27 பந்துகளில் 52 ரன்களை குவித்து (3 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) தனது அரைசத்தை பதிவு செய்துள்ளார்.



  • 20:12 (IST) 10 Oct 2021
    அரைசதம் கடந்தார் பிருத்வி ஷா!

    சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணியில் அதிரடியாக விளையாடி வரும் அதிரடி காட்டி வரும் தொடக்க வீரர் பிருத்வி ஷா 27 பந்துகளில் 52 ரன்களை குவித்து (3 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) தனது அரைசத்தை பதிவு செய்துள்ளார்.



  • 20:00 (IST) 10 Oct 2021
    தவான் அவுட்!

    சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணியில் 1 பவுண்டரியை விரட்டிய தொடக்க வீரர் தவான் 7 ரன் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.



  • 19:59 (IST) 10 Oct 2021
    ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்!

    சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணியில் சரியான தொடக்கம் கிடைக்காமல் தவித்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் அவுட் ஆனார்.



  • 19:50 (IST) 10 Oct 2021
    டெல்லி அணிக்கு நல்ல தொடக்கம்!

    டெல்லி - சென்னை அணிகள் மோதும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்து வீசி வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் - பிருத்வி ஷா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.



  • 19:35 (IST) 10 Oct 2021
    ஆட்டம் இனிதே ஆரம்பம்!

    டெல்லி கேபிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் முதலில் பேட்டிங் செய்ய டெல்லி அணி களமிரங்கியுள்ளது.



  • 19:13 (IST) 10 Oct 2021
    இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்!

    டெல்லி கேபிட்டல்ஸ் (விளையாடும் XI):

    ஷிகர் தவான், பிருத்வி ஷா, ரிஷப் பந்த் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், சிம்ரான் ஹெட்மியர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, டாம் குர்ரான், அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே

    சென்னை சூப்பர் கிங்ஸ் (விளையாடும் லெவன்):

    ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்



  • 19:13 (IST) 10 Oct 2021
    டெல்லிக்கு எதிரான ஆட்டம்; டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு!

    இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 7:30 மணிக்கு துபாயில் நடக்கும் முதலாவது குவாலிஃபைர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    தற்போது டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்ய களம் காணும்.



  • 19:12 (IST) 10 Oct 2021
    150 வது ஐபிஎல் போட்டியில் பிராவோ!

    ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் வீரர் டுவைன் பிராவோ இன்று தனது 150வது போட்டியில் களமிறங்குகிறார்.



  • 18:52 (IST) 10 Oct 2021
    அதிக சிக்சர் … அதிக பவுண்டரி அடித்த அணிகள்!

    இந்த தொடரில் அதிக சிக்சர் விளாசிய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் வலம் வருகிறது. அந்த அணி இதுவரை 100 சிக்சர்களை நொறுக்கியுள்ளது.

    டெல்லி அணி குறைவான சிக்சர் அடித்த அணியாக (54 சிக்சர்) இருந்தாலும் பவுண்டரி எண்ணிக்கையில் (212) முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளது.



  • 18:22 (IST) 10 Oct 2021
    மைதானம் எப்படி?

    சென்னை - டெல்லி அணிகள் மோதும் இதே மைதானத்தில் பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 134 ரன்கள் சேர்த்து தோல்வியை தழுவியது. இந்த இலக்கை பஞ்சாப் அணி 13 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு துபாயில் நடந்த 10 ஆட்டங்களில் 2-வது பேட்டிங் செய்த அணியே 7 முறை வெற்றி கண்டிருக்கிறது. பனியின் தாக்கமும் இருப்பதால் ‘டாஸ்’ வெல்லும் அணி 2-வது பேட்டிங் செய்யவே விரும்பும்.



  • 18:06 (IST) 10 Oct 2021
    ஸ்விங்னா இப்படி இருக்கணும்… இணையத்தை கலக்கும் இந்திய வீராங்கனை!

    ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஆட்டத்தில் தனது ஸ்விங் பந்துகளால் மிரட்டியுள்ளார் இந்திய வீராங்கனை ஷிகா பாண்டே.

    https://tamil.indianexpress.com/sports/cricket-news-in-tamil-shikha-pandey-dismisses-alyssa-healy-video-goes-viral-353477/



  • 18:05 (IST) 10 Oct 2021
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

    இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 7:30 மணிக்கு துபாயில் நடக்கும் முதலாவது குவாலிஃபைர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.



Chennai Super Kings Ipl Live Cricket Score Live Updates Ipl Cricket Ipl News Ipl Live Score Csk Vs Dc Delhi Capitals Ipl 2021 Ipl 2021 Live
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment