scorecardresearch

DC vs PBKS Highlights: பிரப்சிம்ரன் சதத்தால் தப்பிய பஞ்சாப்; 31 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி

பிரப்சிம்ரன் சதத்தால் 167 ரன்கள் சேர்த்த பஞ்சாப்; வார்னர் அரை சதம் அடித்தாலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் டெல்லி தோல்வி; ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி

DC vs PBKS Live Score | IPL 2023 | Delhi vs Punjab Score
Delhi Capitals vs PBKS Live Score: Image Caption – ஐபிஎல் 2023 பஞ்சாப் கிங்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ் ஸ்கோர்

IPL 2023,DC vs PBKS Cricket Match Score in Tamil: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 59-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

Indian Premier League, 2023Arun Jaitley Stadium, Delhi   31 May 2023

Delhi Capitals 136/8 (20.0)

vs

Punjab Kings   167/7 (20.0)

Match Ended ( Day – Match 59 ) Punjab Kings beat Delhi Capitals by 31 runs

டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது.

இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்

டெல்லி கேப்பிடல்ஸ்: டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், பிரவீன் துபே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது, முகேஷ் குமார்

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

பஞ்சாப் பேட்டிங்

பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் மற்றும் தவான் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிறப்பாக அடித்து ரன் சேர்க்க, மறுமுனையில் ஆடி வந்த தவான் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 4 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் அணி 45 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்ததாக சாம் கரண் களமிறங்கினார். சாம் கரண் நிதானமாக ஆட, சிறப்பாக விளையாடிய பிரப்சிம்ரன் அரைசதம் விளாசினார். இதனால் அணியின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்தது. ரன்குவிக்க தடுமாறிய சாம் கரண் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்பிரீத் 2 ரன்களில் வெளியேறினார்.

அடுத்தாக ஷாரூக் கான் களமிறங்கிய நிலையில், பிரப்சிம்ரன் சதம் அடித்து அசத்தினார். இருப்பினும் 103 ரன்களில் பிரப்சிம்ரன் அவுட் ஆனார். அவர் 6 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் விளாசினார். ராசா களமிறங்கி சிக்ஸ் அடித்தார். இதற்கிடையில் ஷாரூக் கான் 2 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த ரிஷி தவான் களமிறங்கிய நிலையில் பஞ்சாப் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. இதில் பிரப்சிம்ரன் 103 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணியில் இஷாந்த் 2 விக்கெட்களையும், அக்சர், பிரவீன், குல்தீப், முகேஷ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

டெல்லி பேட்டிங்

டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் சால்ட் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். வார்னர் பவுண்டரிகளாக விளாசினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்தது. சால்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்ஷ் 3 ரன்களிலும் ரோசோ 5 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்ததாக அக்சர் படேல் களமிறங்கிய நிலையில் வார்னர் அவுட் ஆனார். அவர் 27 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடங்கும். அடுத்ததாக மணீஷ் பாண்டே களமிறங்கிய நிலையில் அக்சர் 1 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்ததாக அமன் ஹக்கீம் களமிறங்கி, நிதானமாக ஆடினார். ஆனால் மறுமுனையில் ஆடிய மணீஷ் பாண்டே டக் அவுட் ஆனார். அடுத்ததாக அமன் உடன் பிரவீன் துபே ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்த நிலையில், இருவரும் தலா 16 ரன்களில் அவுட் ஆகினார். அடுத்தாக குல்தீப் மற்றும் முகேஷ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் ரன் சேர்க்க தடுமாறிய நிலையில், கடைசி ஓவரில் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனையடுத்து பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே அடித்தனர். குல்தீப் 10 ரன்களிலும் முகேஷ் 6 ரன்களிலும் அவுட் ஆகாமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் ஹர்பிரீத் 4 விக்கெட்களையும், எல்லீஸ் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி 6 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. முந்தைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணி, சென்னையிடம் வீழ்ந்ததால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது. இருப்பினும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க அந்த அணி முயற்சிக்கும். அந்த அணியில் பேட்டிங்கில் வார்னர், அக்ஷர் பட்டேல் தவிர யாரும் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் மிட்செல் மார்ஷ், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள்.

பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஷிகர் தவான், ஜிதேஷ் ஷர்மா, பிரப்சிம்ரன் சிங்கும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், நாதன் எலிஸ், சாம் கர்ரன், ஹர்பிரீத் பிராரும் பலம் சேர்க்கிறார்கள்.
முந்தைய இரண்டு ஆட்டங்களில் மும்பை, கொல்கத்தாவிடம் அடுத்தடுத்து உதை வாங்கிய பஞ்சாப் அணி எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

நேருக்கு நேர்

டெல்லி – பஞ்சாப் அணிகள் இதுவரை 30 தடவை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரண்டு அணிகளும் தலா 15 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளன

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Dc vs pbks ipl 2023 live ball by ball commentary delhi capitals vs punjab kings live score at arun jaitley stadium delhi tamil