Advertisment

தவானுக்கு ஏன் டி20 உலக கோப்பை அணியில் இடம் இல்லை? முன்னாள் வீரர் கூறுவது என்ன?

Sunil Gavaskar about shikhar dhawan Tamil News: இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மூத்த வீரர் தவானுக்கு இடம் இல்லை என முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
dhawan unlikely to feature in India’s squad for the T20 World Cup says sunil Gavaskar

Sunil Gavaskar believes Dhawan is unlikely to feature in India’s squad for the T20 World Cup later this year. (AP Photo/Halden Krog)

Shikhar Dhawan Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வருபவர் தொடக்க வீரர் ஷிகர் தவான். தனது சிறப்பான ஆட்டத்தால் தனக்கென ரசிகர் பெருங்கூட்டதை வைத்துள்ள இவர் கடந்த 2010ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்தார். இவர் 34 டெஸ்ட் போட்டிகளில் 2315 ரன்களையும், 149 ஒருநாள் போட்டிகளில் 6284 ரன்களையும், 68 டி-20 போட்டிகளில் 1759 ரன்களையும் குவித்துள்ளார்.

Advertisment

தவான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் ஐசிசி போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் ஆனார். இந்த சாதனையை அடைய சச்சின் டெண்டுல்கர் 18 இன்னிங்ஸ்களும், சவுரவ் கங்குலி 20 இன்னிங்ஸ்களும் எடுத்த நிலையில், 16 இன்னிங்ஸ்களில் கடந்து தவான் அசத்தினார்.

2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியின் தொடர் நாயகன் விருதை வென்றவர் தவான். 2017ம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அவர் 271 ரன்கள் எடுத்தார், இலங்கைக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் 125 ரன்களாக இருந்தது. இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்கிற சாதனையையும் படைத்திருக்கிறார். மேலும், குறைந்தபட்சம் 500 ரன்களுடன் 100 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்ட ஒரே பேட்ஸ்மேன் ஷிகர் தவான் மட்டுமே உள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் அவரது சராசரி130க்கு மேல் உள்ளது.

சுனில் கவாஸ்கர் கருத்து

publive-image

முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்

இப்படியாக பல்வேறு சாதனைகளை படைத்து, அதிக அனுபவம் கொண்ட வீரராக வலம் வரும் ஷிகர் தவானுக்கு, இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பையில் கலந்து கொள்ள உள்ள இந்திய அணியில் இடம் இல்லை என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "ஷிகர் தவான், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் களமாடிய இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. டி20 உலக கோப்பைக்கான அணியில் ஷிகர் தவானை எடுப்பதாக இருந்திருந்தால் அயர்லாந்து உடனான தொடரில் இடம்பிடித்திருக்க வேண்டும். நிறைய வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு சென்றுள்ளனர். அதிலாவது அவர் இடம்பெற்றிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் இல்லை. எனவே டி20 உலக கோப்பைக்கான அணியில் அவருக்கு இடம் இருக்காது. என்னைப் பொறுத்தமட்டில் ரோகித்தும் கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்களாக இறங்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.

காரணம் என்ன?

தவான் கடைசியாக ஜூலை 2021ல் இந்தியாவுக்காக ஒரு டி20 போட்டி விளையாடினார். அதன்பிறகு அவர் இலங்கையில் நடந்த மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய இளம் அணியை வழிநடத்தினார். தற்போது 36 வயதான அவர் 2020ம் ஆண்டு முதல் இந்தியாவுக்காக ஆறு டி20 போட்டிகளில் மட்டுமே இடம்பெற்றுள்ளார். மேலும் இந்தியாவின் டி-20 வரிசையில் கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் தொடக்க இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல், உலகில் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஐபிஎல்லின் கடந்த மூன்று சீசன்களில் தவான் 1,665 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த சீசனில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 122 ஆக உள்ள நிலையில், அவர் மீதான அழுத்தம் அதிகரித்த வண்ணமே உள்ளது.

publive-image

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள், அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் இந்த வாரம் அயர்லாந்திற்குச் செல்லவுள்ளனர். அதே நேரத்தில் மற்றொரு இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே இங்கிலாந்தில் ஜூலை 1ம் தேதி முதல் நடக்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.

தவான் டி-20 மற்றும் டெஸ்ட் அணிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தாலும், அவர் இன்னும் இந்தியாவின் ஒருநாள் அணிக்கான வரிசையில் ஒரு முக்கிய வீரராக இருக்கிறார். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்காவில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவராகவும் இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அவரின் பெயரும் இடம்பிடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Cricket Shikhar Dhawan Sunil Gavaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment