ரியாக்ஷன் காட்டாத தோனி: மீண்டும் வாங்கிக் கட்டிக் கொண்ட ஹர்ஷ் கோயங்கா!

ஹர்ஷ் கோயங்கா… இந்தப் பேரை நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், தோனி ரசிகர்களுக்கு மட்டும் நன்கு அறிந்த, வச்சு செய்த பெயராகும். அப்படி என்ன செஞ்சாரு தானே கேட்குறீங்க? சிஎஸ்கே அணியின் இரண்டு ஆண்டு தடைக்கு அப்புறம், தோனியை புனே அணி வாங்கியது. அதில் 2016 சீசனில் தோனி தலைமையிலான புனே அணி, பிளே ஆஃபிற்கு தகுதிப் பெறவில்லை. இதனால், 2017ம் ஆண்டு சீசனில் புனே அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக்கியது புனே நிர்வாகம்.

இதில், யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இளம் வீரரை கொண்டு அணியை வழிநடத்தலாம் என புனே நிர்வாகம் முடிவு செய்திருக்கலாம் என தோனியின் ரசிகர்கள் பெரிதாக ரியாக்ஷன் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், 2017 சீசனினின் முதல் போட்டியில் புனே அணியை இறுதி ஓவரில் சிக்சர் அடித்து வெற்றிப் பெற வைத்தார் ஸ்மித். தோனி அப்போட்டியில் விரைவில் அவுட்டாகிவிட்டார்.

உடனே, புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டரில், ‘காட்டுக்கு யார் உண்மையான ராஜா என்பதை ஸ்மித் நிரூபித்து விட்டார். தோனியை காணாமல் செய்துவிட்டார்’ என்று ட்வீட் போட்டார்.

இதுக்கு சும்மா இருக்க முடியுமா? போதும்..போதும்…ங்கற அளவுக்கு ஹர்ஷ் கோயங்காவை கலாய்த்து தள்ளினர் தோனி ரசிகர்கள். அவர்கள் மட்டுமல்ல… பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

அதே சீசனில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் அதிரடி ஆட்டத்தால் புனே வெற்றிப் பெற, ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டரையே ஒப்பன் பண்ண முடியாத அளவிற்கு படுத்தி எடுத்துவிட்டனர் ரசிகர்கள்.

ஆனால், இது எவற்றிற்கும் தோனி ரியாக்ஷன் காட்டவில்லை. (அவர் தான் எதற்குமே காட்ட மாட்டாரே!)

பட், தோனியின் மனைவி சாக்ஷி ஒரு போடு போட்டார் பாருங்க…  ஒரு குட்டி கதையை சொல்லி ஹர்ஷ் கோயங்காவுக்கு ரிப்ளை கொடுத்தார்.. ‘இன்று பறவைகள் எறும்புகளை தின்னலாம்.. ஆனால், ஒருநாள் அந்த பறவை இறக்கும் போது, அதே எறும்புகள் அந்த பறவையை தின்னும்’ என்று ட்வீட் போட்டு அந்த மனிதரை செம காண்டாக்கினார்.

இந்த கூத்து எல்லாம் முடிந்து, இப்போ 2018 ஐபிஎல்-லும் முடிஞ்சு போச்சு!. தல தோனி தன் கையால திரும்பவும் கப் வாங்கியாச்சு!! வாங்காம இருக்க முடியுமா? தல ஆடுறது சிஎஸ்கே டீமுல-ல… ஆனா, சென்னை கப் அடிச்ச கோபமோ, இல்ல இந்த சீசன் ஃபுல்லா ஒவ்வொரு மேட்ச்சும் தோனி அடிச்ச மரண அடியின் வலியோ என்னவோ, ஹர்ஷ் கோயங்கா மீண்டும் தனது ட்விட்டரில் ஒரு ட்வீட்டை போட்டு செமத்தியா வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கார்.

அப்படி என்ன செய்தார்?

அதாவது, இந்த ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய பிளேயர்களை தேர்ந்தெடுத்து அவரது பெஸ்ட் ஐபிஎல் அணியை உருவாக்கியுள்ளார். பிரச்சனை என்னனு இப்போ புரிஞ்சுடுச்சா? ஆங்!! அதில், தோனி பெயர் இல்ல..

அவரது பெஸ்ட் ஐபில் அணி,

லோகேஷ் ராகுல்,

சுனில் நரைன்,

விராட் கோலி,

கேன் வில்லியம்சன் (கேப்டன்),

ரிஷப் பண்ட்,

தினேஷ் கார்த்திக்,

ஹர்திக் பாண்ட்யா,

ரஷித் கான்,

உமேஷ் யாதவ்,

புவனேஷ் குமார்,

டை.

தோனி இந்த சீசனில் எப்படி அடித்தார் என்று நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. ‘தோனிக்கு பந்துவீசும் போது பவுலர்களின் கண்களில் பயத்தை பார்த்தேன்’ என ஹர்பஜன் சிங் கூறிய அந்த ஒற்றை வரியே போதுமானது தோனியின் அடியை பற்றி விளக்க…

ஆனால், பெஸ்ட் லெவன் அணியில் தோனியை ஹர்ஷ் கோயங்கா தேர்வு செய்யவில்லை. அது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால், காரணம் என்ன என்பதை மேலே நாம் விவரித்ததில் இருந்தே அறியலாம்.

இப்படி இருந்தால் தோனி வெறியர்கள் வாயில் இருந்து வருவது வேறு என்னவாக இருக்க முடியும்? அடிங்….

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close