Advertisment

சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..! U19 உலக கோப்பையில் சிரிப்பாய் சிரித்த இந்திய ரன்அவுட்

அவர்கள் இருவரும் ரன்அவுட் தான், வாழ்நாளில் இப்படி ஒரு தருணத்தை பார்த்ததில்லை,என்று வர்ணனையாளர் குறிப்பிட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..! U19  உலக கோப்பையில் சிரிப்பாய் சிரித்த இந்திய ரன்அவுட்

U19 World Cup Final : Dhruv Jurel Run Out video

Dhruv jurel runout video: நேற்று நடைபெற்ற U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கிரிக்கெட் உலகம் வித்தியாசமான ரன் அவுட்டைக் கண்டது.

Advertisment

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் திறமையாக விளையாடி 88 ரன்கள் எடுத்தார். 40வது ஓவரில் ஜெய்ஸ்வால் பெவிலியன் திரும்பிய பிறகு, இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறினார்கள். விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன.

அதிலும், குறிப்பாக 43 ஓவரில் ஏற்பட்ட ஒரு ரன்-அவுட் இந்தியாவின் பலத்தை மேலும் சிதைத்தது.

கிரீஸில் இருந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜூரெல், பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சாளர் ராகிபுல் ஹசன் வீசிய பந்தில் விரைவான ஒற்றை ரன் எடுக்க முயன்றார். மறுமுனையில் இருந்த அதர்வா அழைப்புக்கு பதிலளிக்கவில்லை.

பந்தைக் கைப்பற்றிய பீல்டர் ஷமிம் ஹொசைன் உடனடியாக கீப்பருக்கு அனுப்பினார். இதனால் தடுமாறிய  ஜூரெல்-அதர்வா இருவரும் ஒரே  நேரத்தல் பவுலர் கிரீசை நோக்கி ஓடினர். விக்கெட் கீப்பர் சற்றும் பதட்டப்படாமல் பெயில்சை கையில் எடுத்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்திய அணியில் இப்போது யார் அவுட் என்ற கேள்வி எழுந்தது. இதை தீர்மானிக்க ஒட்டுமொத்த கிரிகெட் உலகமே தடுமாறியது. ஜூரெல்-அதர்வா யார் முதலில் கோட்டைக் கடந்தது என்பதைக் கண்டறிய பல ரீப்ளேக்கள் காட்டபப்ட்டன. ஒவ்வொரு  ரீப்ளேயிலும் புது புது குழப்பங்கள் தான் மிச்சம்.

"அவர்கள் இருவரும் அவுட் தான், தான் வாழ்நாளில் இப்படி ஒரு தருணத்தை பார்த்ததில்லை ,"என்று வர்ணனையாளர் குறிப்பிட்டார். இறுதியாக அதர்வா தனது முனைக்கு விரைவாக வந்துவிட்டதாக கண்டறியப்பட்டது. ஜூரெல் முறையாக அவுட் என்று அறிவிக்கபப்ட்டார்.

Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment