அடுத்த தங்கமா!! அசரடிக்கும் இளவேனில் வாலறிவன்! – சிகரம் தொட்ட கதை

இளவேனில் வாலறிவன்…. கடந்த ஆகஸ்ட் மாதம், பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனேரியோவில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதித்த இந்த இளம் வீராங்கனையை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. Just look at these happy faces.???? This will make…

By: November 21, 2019, 7:38:22 PM

இளவேனில் வாலறிவன்…. கடந்த ஆகஸ்ட் மாதம், பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனேரியோவில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதித்த இந்த இளம் வீராங்கனையை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது.


கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவேனில், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் பங்கேற்று விளையாடி வருகிறார். தற்போது சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று சாதனை படைத்த இளவேனில், இன்று நடைபெற்ற போட்டியில் 250.8 புள்ளிகள் பெற்று, மீண்டும் ஒரு முறை தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.


இளவேனில் வாலறிவன் கடலூர் மாவட்டம் காரமணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தை வாலறிவன், தாய் சரோஜா. இவர்கள் 2 பேரும் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இறைவன் ( 24) என்கிற மகன் உள்ளார். இளவேனில் இவர்களது கடைக்குட்டி.

வாலறிவன் குஜராத் மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் குடும்பத்துடன் அங்கு சென்றுவிட்டார். சரோஜா குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதல்வராக இருந்து வருகிறார். இறைவன் தற்போது ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சகோதரர் இறைவன் துப்பாக்கிச் சுடுவதில் பயிற்சி பெற்று சிறப்பாகத் துப்பாக்கிச் சுடுவதைப் பார்த்து ஆர்வமான இளவேனில், 7-ம் வகுப்பு படிக்கும் சமயத்தில், ‘நானும் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபடப் போகிறேன்’ என கூறியிருக்கிறார். பெற்றோர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து, துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு, இளவேனில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் டாக்டர் மற்றும் இன்ஜினீயரிங் படிப்புக்கான சீட் கிடைத்தது. ஆனால், அந்தத் துறை படிப்பில் கவனம் செலுத்தினால் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் சரியான முறையில் கவனம் செலுத்த முடியாது என இளவேனில் எண்ணிக்கொண்டு அந்தப் படிப்பை தவிர்த்துவிட்டார்.

இன்று, தங்கம் மேல் தங்கத்தை குவித்து வருகிறார் இந்த ‘கடைக்குட்டி தங்கம்’!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Elavenil valarivan win gold in world cup finals 2019 china

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X