Advertisment

FIFA World Cup Foot Ball 2018: தமிழ் உட்பட ஆறு மொழிகளில் ஒளிபரப்பாகும் உலகக் கோப்பை கால்பந்து!

ஒட்டுமொத்தமாக ஆறு மொழிகளில் 2018 ஃபிபா உலகக் கோப்பைத் தொடர் ஒளிபரப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FIFA World Cup Foot Ball 2018: தமிழ் உட்பட ஆறு மொழிகளில் ஒளிபரப்பாகும் உலகக் கோப்பை கால்பந்து!

FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது. முதல் போட்டியில் சவுதி அரேபியா அணியை ரஷ்யா எதிர்கொள்கிறது. போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.

Advertisment

முதன் முதலாக இந்தியாவில் பல மொழிகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. இந்தியாவில் சோனி நிறுவனம் தான் போட்டிகளை ஒளிபரப்பு செய்கிறது. Football Extraaa, the pre, mid & post-match ஷோ என அனைத்தும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி மற்றும் முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பைசுங் பூட்டியா ஆகிய இருவரும் இருமொழிகளில் உள்ள பேனல்களில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களைத் தவிர, சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர்கள் லூயிஸ் கார்சியா, முன்னாள் மான்செஸ்டர் யுனைட்டட் ஃபார்வேர்ட் வீரர் லூயிஸ் சாஹா, முன்னாள் இங்கிலாந்து கோல் கீப்பர் டேவிட் ஜேம்ஸ் ஆகியோரும் இந்த ஷோக்களில் பங்கேற்கின்றனர். ‘Greatest show on earth’ எனும் பெயரில் நடக்கவுள்ள ஷோவில், ஆஷ்லே வெஸ்ட்வுட், குர்ப்ரீத் சிங், ராபின் சிங் மற்றும் நோவி கபாடியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகள் குறித்து விரிவாக அலசி ஆராய உள்ளார்கள்.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ஆறு மொழிகளில் 2018 ஃபிபா உலகக் கோப்பைத் தொடர் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதுகுறித்து சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனத்தின் விளையாட்டு மற்றும் விநியோக வணிகம் பிரிவின் தலைவர் ராஜேஷ் கவுல் கூறுகையில், "எங்களது புதுமையான நிகழ்ச்சிகளின் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ரசிகர்களிடம் கால்பந்தை கொண்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் எங்களுக்கு உள்ளது. உலகில் சில தலைசிறந்த கால்பந்து வீரர்களை இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் மூலம், எங்கள் பார்வையாளர்களுக்கு போட்டியைப் பற்றிய நுண்ணிய பார்வை கிடைக்கப்பெறும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தயாவில் ஒளிபரப்பாக உள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment