தமிழகத்தின் விஜய் ஷங்கரை தேர்வு செய்தது பெரும் அதிர்ச்சி! வார்த்தை மோதலில் கம்பீர் - எம்.எஸ்.கே பிரசாத்

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர், முன்னாள் பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் எடுத்த சில முடிவுகள் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, 2019 உலகக் கோப்பைக்கு அம்பதி ராயுடு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கரைத் தேர்வு செய்து போன்ற செயல்கள் ‘முற்றிலும் அதிர்ச்சியூட்டும்’ செயல்கள் என்று கூறியுள்ளார்.


“கேப்டன் தேர்வாளர்களாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கேப்டனும் பயிற்சியாளரும் தேர்வாளர்களாக இருக்க வேண்டும். தேர்வாளர்கள் விளையாடும் லெவன் போட்டியில் எதுவும் சொல்லக்கூடாது. விளையாடும் லெவன் கேப்டனின் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் வாக்களிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும், ஏனெனில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியின் பொறுப்பைக் குறைக்க முடியாது” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியான‘ கிரிக்கெட் கனெக்ட் நிகழ்ச்சியில் கம்பீர் கூறினார்.

தூண்டில் போட்டு சுறா பிடிக்கும் பிசிசிஐ – அது நடந்தால் ஐபிஎல் கன்ஃபார்ம்

இந்திய கிரிக்கெட் சட்டங்களின்படி, தேர்வு செயல்பாட்டில் கேப்டனுக்கு வாக்கு கிடையாது என்று எம்.எஸ்.கே.பிரசாத் கூறினார். “தேர்வு செயல்பாட்டில் கேப்டன் எப்போதும் கருத்து சொல்வார்கள். இதற்கு இரண்டு வழிகள் இல்லை. எங்கள் பைலாக்களின் படி அவருக்குவாக்கு கிடையாது”என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்னர் ஏற்பட்ட 3 டி கிரிக்கெட்’ சர்ச்சையை மேற்கோள் காட்டி கம்பீர், இது ஒரு தலைமை தேர்வாளரிடமிருந்து உத்தரவாதமளிக்கப்பட்ட அறிக்கை அல்ல என்று கூறினார்.

கம்பீர் கூறுகையில், “விஜய் சங்கர் உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற சில முடிவுகள் முற்றிலும் அதிர்ச்சியாக இருந்தன. அநேகமாக உலகக் கோப்பையில் அம்பதி ராயுடுவைத் தேர்வு செய்யவில்லை. அணியின் நான்காம் நிலைக்கான வீரரை அவர்கள் கண்டுபிடிக்கவேயில்லை. அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. அம்பதி ராயுடுவுக்கு என்ன ஆனது என்று பாருங்கள் – நீங்கள் அவரை இரண்டு ஆண்டுகளாக தேர்ந்தெடுத்தீர்கள். இரண்டு ஆண்டுகள், அவர் நான்காம் நிலை வீரராக பேட்டிங் செய்தார். உலகக் கோப்பை தொடருக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு, உங்களுக்கு திடீரென 3-டி வீரர் தேவைப்பட்டாரா? எங்களுக்கு 3-டி கிரிக்கெட் வீரர் தேவை என்று ஒரு தேர்வுக் குழுத் தலைவர் விரும்பும் அறிக்கை இதுதானா? ”

இதற்கு எம்.எஸ்.கே.பிரசாத் பதிலளிக்கையில், “நான் தெளிவுபடுத்துகிறேன். அணியின் டாப் ஆர்டரில் எல்லோரும் பேட்ஸ்மேன்கள் – ஷிகர், ரோஹித், விராட். பந்து வீச யாரும் இல்லை. டாப் ஆர்டரில் பேட் செய்யும் விஜய் சங்கர் போன்ற ஒருவர் ஆங்கில நிலைமைகளில் பந்துவீச்சில் உதவியிருக்க முடியும் என்றார்.

குழுவின் ஒரு பகுதியாக இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இந்த கட்டத்தில் எம்.எஸ்.கே.பிரசாத் போதுமான சர்வதேச கிரிக்கெட்டை (6 டெஸ்ட்) அனுபவத்தை கொண்டிருக்கவில்லை என்ற கூற்றை முன்வைத்தார். தேர்வுக் குழுவுக்கு போதுமான அனுபவம் இல்லை என்று கூறிய சுனில் கவாஸ்கர், எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான குழு ஒரு ‘நொண்டி வாத்து’ என்று முன்பு கூறியிருந்தார்.

ஸ்ரீகாந்த், கம்பீரின் கருத்தை முழுமையாக ஆதரிக்கவில்லை, அதேசமயம் எம்.எஸ்.கேவை குறைத்து மதிப்பிடவில்லை, ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிற்கும் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது” என்றார்.

தோனி யுக்தியால் முடிந்த பாகிஸ்தான் விதி – சூப்பர் ஓவர் ‘சீக்ரெட்ஸ்’ பகிரும் உத்தப்பா

“வித்தியாசம் இருப்பதை நான் ஸ்ரீகாந்துடன் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அனுபவம் எல்லா நேரத்திலும் ஒரே அளவுருவாக இருக்க முடியாது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த செயல்பாட்டில் நீங்கள் வீரர்களை இழக்க நேரிடும், ”என்று பிரசாத் கூறினார், அவருக்கு பதிலாக இந்தியாவின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி புதிய தேர்வாளர்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

“உங்கள் தேர்வாளர்களின் தலைவர் ஒரு அனுபவமிக்க கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டும், அவர் போதுமான சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவராக இருக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டின் ஏற்ற தாழ்வுகளைக் கண்டவராக இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக வீரர்களைப் புரிந்துகொள்வீர்கள்” என்று கம்பீர் மேலும் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close